OUR CLIENTS
ஆப்கான் நூலக விவகாரம்: மோடியை கிண்டல் செய்த டிரம்ப், கடுமையாகச் சாடிய காங்கிரஸ்
ஆப்கான் நூலக விவகாரம்: மோடியை கிண்டல் செய்த டிரம்ப், கடுமையாகச் சாடிய காங்கிரஸ் Posted on 03-Jan-2019 ஆப்கான் நூலக விவகாரம்: மோடியை கிண்டல் செய்த டிரம்ப், கடுமையாகச் சாடிய காங்கிரஸ்

ஆப்கானிஸ்தானுக்கு நூலகம் தேவையில்லை என பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிண்டல் செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு தரப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் அங்கு நூலகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதனை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைப்பதால் எந்த உபயோகமும் இல்லை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து தொடர்ந்து என்னிடம் தெரிவித்து வந்தார். அந்த நூலகத்தை ஆப்கானிஸ்தானில் யார் பயன்படுத்துவார்கள் என்று கூடத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்தப் பேச்சு தேவையற்றது. இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே நல்லுறவு நீடிக்கிறது.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அங்கு சாலைகள், அணைகள் என சுமார் 3 பில்லியன் அளவிலான வளர்ச்சித் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதில் டிரம்ப் பேசிய விதம் முற்றிலும் தவறானது என கடுமையாகச் சாடினார். 

Label