OUR CLIENTS
ரயில்வே துறைக்கு ஆண்டு குத்தகை வருவாய் ரூ.1 கோடி! வாகன பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது
ரயில்வே துறைக்கு ஆண்டு குத்தகை வருவாய் ரூ.1 கோடி! வாகன பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது Posted on 04-Jan-2019 ரயில்வே துறைக்கு ஆண்டு  குத்தகை வருவாய் ரூ.1 கோடி! வாகன பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது

விழுப்புரம், ஜன.4-

விழுப்புரம் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம்அமைப்பது குறித்து திருச்சி கோட்ட ரயில்வேமேலாளர் உதயகுமார் ரெட்டி கடந்த நவம்பர் 2ம் தேதிநேரில் ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியை சீரமைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் வாடகைக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க தனியாருக்கு குத்தகை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சம் சதுர அடிக்குமேற்பட்ட வளாகம் வாகன நிறுத்துமிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இப்பகுதியில் பயணிகள் வாகனங்களில் வந்து செல்வதற்கும், அழைத்து செல்வதற்கும் வழியனுப்புவதற்கும் வரும் பொதுமக்களுக்கு எந்தவிதபாதிப்பும் இன்றி வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் போதிய அளவில் ஷெட் அமைக்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்படுகின்றன. வெயிலோ, மழையோ வாகனங்கள் அனைத்தும் பரிதாபமான நிலையில் நிறுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இத்துடன் இரு சக்கர வாகனத்திற்கு நாள் ஒன்றுக்கு 20 ரூபாயும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு 80 ரூபாயும், சைக்கிளுக்கு 10 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இது பற்றி கேட்டால், ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்றுதான் அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கின்றனர்.இப்பிரச்னை குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம்  புகார் தெரிவித்தும் கட்டணம் மறுபரிசீலனை செய்யப்படவில்லை.குத்தகைதாரர் தரப்பில் ஓராண்டு குத்தகை தொகையாக ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் எடுத்திருப்பதாக தெரிய வருகிறது. இதன் மூலம் ஒரு கோடி ரூபாய் ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் வாகன நிறுத்துமிடத்திற்கு தேவையான ஷெட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தர முன்வரவில்லை.வாகன நிறுத்துமிடத்தை சீரமைத்து போதிய வசதிகளை மேம்படுத்தவும் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை குறைத்திடவும் ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Label