OUR CLIENTS
வேலூரில் பழைய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்!
வேலூரில் பழைய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்! Posted on 04-Jan-2019 வேலூரில் பழைய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்!

வேலூர், ஜன.4-

வேலூரில் பழைய பொருட்களை கொண்டு வந்து நுகர்வோரை ஏமாற்றி கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து விற்பனை செய்யும் பணியில் களம் இறங்கியுள்ளது ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

வேலூரில் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்று சொல்லிக் கொண்டு பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாரி குவித்து வைத்து கொண்டு நுகர்வோரை ஏமாற்றி வியாபாரம் செய்து வருகிறது ஒரு நிறுவனம். இந்த நிறுவனமானது விளம்பரம் செய்யும்போதே தனது கடையில் வேறு எங்கும் கிடைக்காத பொருட்கள் விலை குறைவாகவும், தரமாகவும் கிடைப்பதாக கூறி நுகர்வோர் தலையில் மிளகாய் அரைக்கிறது. 
இந்த கவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி ஏமாறும் பல நுகர்வோர் இந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தங்கள் வீடுகளுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆன்லைன் விலைக்கே விற்பனை செய்வதாக பீலா  விடுகின்றனர். அத்துடன் இந்த நிறுவனத்தில் வாங்கிச் செல்லும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் 2 மாதங்களுக்குள் பழுதாகி விடுகிறது. பழுதானதை  கொண்டு சென்றால் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி தட்டிக்கழிக்கின்றனர். ஆனால் சர்வீஸ் சென்டரில் இருப்பவர்கள் இந்த பொருட்கள் பழைய பொருட்கள் ஆயிற்றே என்று கூறி அவர்களும் நுகர்வோரை  திருப்பி அனுப்புகின்றனர். பொருட்கள் வாங்கிய நுகர்வோர் அலைகழிக்கப் படுகின்றனர்.   
நிலைமை இப்படி இருக்கிறது. இந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் பொருட்கள் வாங்கியவர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளனர். ஒரு பொருள் பழுதானால் கியாரண்டி, வாரண்டி இருந்தாலும் யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை. சர்வீஸ் இன்ஜினியரை கூட அனுப்பி பழுதுநீக்கி தருவதில்லை.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எங்களது கிளை ஆரணி, குடியாத்தத்தில் உள்ளது என்று பெருமைபட மார்தட்டிக் கொண்டுள்ளது. அத்துடன் சரி. இவர்களால் பாதிக்கப்பட்ட பல நுகர்வோர் புலம்புகின்றனர். பணத்தை கொடுத்து சூனியம் வைத்து கொண்டது போன்று உள்ளது என்று கதை கதையாக கூறுகின்றனர். அதாவது புத்தாண்டு, பொங்கல் விற்பனை என்று சொல்லியே நுகர்வோரை ஏமாற்றியே பிழைப்பு நடத்தி வருகிறது இந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். நுகர்வோரே உஷார்... உஷார்... கவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகாதீர்கள். 
நல்ல தரமான நம்பிக்கையான கடைகளை தேர்வு செய்து தங்களது இல்லங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்லுங்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாடுபட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து கொடுத்து விட்டு பழைய பொருட்களை வாங்கிச் செல்லாதீர்கள். அவர்களுக்கு பழைய பொருட்களை நுகர்வோர் தலையில் கட்டிவிட்டு கொண்டாட்டமாக உள்ளனர். ஆனால் வாங்கிய நுகர்வார்  மனதளவிலும், பணத்தை இழந்தும் திண்டாட வேண்டியுள்ளது.

Label