OUR CLIENTS
சம்பளம் வழங்க கடன் பி.எஸ்.என்.எல்., திட்டம்!
சம்பளம் வழங்க கடன் பி.எஸ்.என்.எல்., திட்டம்! Posted on 04-Jan-2019 சம்பளம் வழங்க கடன்  பி.எஸ்.என்.எல்., திட்டம்!

வேலூர், ஜன.4-

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வங்கிகளில் கடன் பெற பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 30 ஆயிரம் ஊழியர்களும் நாடு முழுவதும் 1.85 லட்சம் ஊழியர்களும் அதிகாரிகளும் பி.எஸ்.என்.எல்.,லில் பணியாற்றுகின்றனர். பி.எஸ்.என்.எல்., பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்கி வந்தது.  இந்த நடைமுறை 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மாற்றப்பட்டது. இதில், கிரேடு 'ஏ' அதிகாரிகளுக்கு 5ம் தேதியும், கிரேடு 'பி, சி மற்றும் டி' பிரிவு ஊழியர்களுக்கு 1ம் தேதியும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சம்பளம் வழங்கவே முடியாத நிலையில் பி.எஸ்.என்.எல்., உள்ளது. இதனால் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளம் வழங்க விஜயா மற்றும் ஆந்திரா வங்கிகளில் கடன் பெற நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label