OUR CLIENTS
திருவாரூர் திமுக வேட்பாளர் உதயநிதி?
திருவாரூர் திமுக வேட்பாளர் உதயநிதி? Posted on 04-Jan-2019 திருவாரூர் திமுக வேட்பாளர் உதயநிதி?

சென்னை, ஜன.4-

தமிழகத்தில் காலியாக 20 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் வரும் 28ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் அமமுக வேட்பாளர் பெயர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக திருவாரூர் மாவட்ட அமமுக செயலாளர் காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப் படலாம் என அக்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை கடந்த தேர்தலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் மீண்டும் களம் இறக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் அமைச்சர் காமராஜ் அதனை விரும்பவில்லை என்பதால் அவருக்கு மிக நெருக்கமான ஜெ., பேரவை நிர்வாகியான கலியபெருமாள் வேட்பா ளராக அறிவிக்கப்படலாம் என அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
திமுகவைப் பொறுத்த வரை கருணாநிதியின் தொகுதி என்பதால் வேட்பாளர் யார்? என்பதில் கடும் எதிர்பார்ப்பு உள்ளது. திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், ஒன்றிய செயலாளர்கள் தேவா, சேகர் என பல்வேறு பெயர்கள் கூறப் பட்டாலும், கருணாநிதியின் குடும்பத் தினரில் ஒருவர் நிறுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என உறவினர்கள் வலியுறுத்து வதாக  தெரிகிறது. அந்த வகையில் உதயநிதியை களம் இறக்கலாமா? என்பது குறித்து உறவினர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

Label