OUR CLIENTS
உருமாறியுள்ள சாலை!
உருமாறியுள்ள சாலை! Posted on 04-Jan-2019 உருமாறியுள்ள சாலை!

வேலூர், ஜன.4-

காட்பாடி காந்திநகர் ரவுன்டானாவிலிருந்து ஆக்சீலியம் பள்ளி, கல்லூரி, வி.ஜி. ராவ் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் காங்கேயநல்லூர்  செல்லும் பிரதான சாலை மக்கள் பயன்பாட்டுக்கு உதவாத அளவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக உரு மாறியுள்ளது.

இதனால் அந்த சாலையை கடந்து செல்ல மிகவும் துன்பப்படும் நிலையே உள்ளது. மாநகராட்சியின் கட்டுபாட்டிலுள்ள அந்த சாலை கடந்த பல வருடங்களாக இதே நிலையில் உள்ளது தினசரி பள்ளி கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவியர் மிகவும் சிரமப்பட்டு அச்சாலையை கடந்து செல்ல அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலையில் செல்வதே மிகவும் ஆபத்தாக உள்ளது, தவிர தினசரி இருசக்கர வாகணங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் தொடர்வதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த சாலையை கவனத்தில் கொண்டு சீர் செய்ய வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label