OUR CLIENTS
அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு பணிகளை பார்வையிட்டார் அமைச்சர்!
அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு பணிகளை பார்வையிட்டார் அமைச்சர்! Posted on 04-Jan-2019 அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு  பணிகளை பார்வையிட்டார் அமைச்சர்!

வாணியம்பாடி, ஜன.4-

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டு வரும் டயாலிஸிஸ் பிரிவு கட்டப்பணிகளை அமைச்சர் நீலோபர்கபீல் பார்வையிட்டார்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக டயாலிஸிஸ் பிரிவு இல்லாததால் அப்பிரிவினை அரசு மருத்துவமனையில் தொடங்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான நீலோபர்கபீலிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு கட்டடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து டயாலிஸிஸ் பிரிவுக்கான கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நேற்று முன்தினம் அமைச்சர் நீலோபர்கபீல் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மருத்துவ அலுவலர் அம்பிகா, டாக்டர் செந்தில், நகர அதிமுக செயலாளர் சதாசிவம், கூட்டுறவு சர்க்கரை  ஆலை இயக்குநர்  சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நீலோபர்கபீல் கூறியதாவது, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மக்களின் நீண்ட கோரிக்கையாக இருந்த டயாலிஸிஸ் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.  அதற்கான உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது கட்டடப்பணிகள் முடிந்தவுடன் டயாலிஸிஸ் பிரிவு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தொடங்கப்படும் என்றார்.

Label