OUR CLIENTS
வழக்குரைஞரை தாக்கிய டிஎஸ்பி, எஸ்ஐயை கைது செய்யக்கோரி திடீர் மறியல்!
வழக்குரைஞரை தாக்கிய டிஎஸ்பி, எஸ்ஐயை கைது செய்யக்கோரி திடீர் மறியல்! Posted on 05-Jan-2019 வழக்குரைஞரை தாக்கிய டிஎஸ்பி, எஸ்ஐயை  கைது செய்யக்கோரி திடீர் மறியல்!

விழுப்புரம், ஜன.5-

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரை தாக்கிய டிஎஸ்பி, எஸ்ஐயை கைது செய்யக்கோரி, விழுப்புரம் எஸ்பி அலுவலகம் முன்  வழக்குரைஞர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் கபில்ரங்கா, பொக்காராம். இவர்களின் நிறுவன பெயரை பயன்படுத்தி விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளி விற்பனை செய்வதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பேவல் மூலம் வடக்கு மண்டல ஐஜி நாகராஜனிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.  நேற்று முன்தினம் வழக்குரைஞர் பேவல் மற்றும் புகார்தாரர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்துள்ளனர். அப்போது பேவல், டிஎஸ்பி சரவணனிடம், இதுநாள்வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து அலைக்கழிப்பு செய்கிறீர்களே என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டிஎஸ்பி சரவணன், குற்றப்பிரிவு எஸ்ஐ அண்ணாதுரை ஆகியோர் சேர்ந்து பேவலை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக பேவல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட டிஎஸ்பி, எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேவல், எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார். இதனிடையே பேவலை தாக்கிய டிஎஸ்பி, எஸ்ஐ மீது வழக்குப் பதிந்து கைது  செய்யக்கோரி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த எஸ்பி ஜெயக்குமார், வழக்குரைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. வடக்கு மண்டல ஐஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்றப்பிரிவு எஸ்ஐ அண்ணாதுரையை இடமாற்றம் செய்வதாக கூறினார். இதையேற்று அவர்கள் மறியலை கைவிட்டனர்.

Label