OUR CLIENTS
போராட்டத்தில் குதிக்க நில அளவையர்கள் முடிவு!
போராட்டத்தில் குதிக்க நில அளவையர்கள் முடிவு! Posted on 05-Jan-2019 போராட்டத்தில் குதிக்க நில அளவையர்கள் முடிவு!

மதுரை, ஜன.5-

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக பட்டா உட்பிரிவு மாறுதலுக்கு, வி.ஏ.ஒ.,க்கள் பரிந்துரையை அரசு அனுமதித்தால், காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என நில அளவை அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

பட்டா உட்பிரிவு மாறுதலுக்கு வி.ஏ.ஒ.,க்கள் பரிந்துரையை அமல்படுத்த கோரி, வி.ஏ.ஒ.,க்கள் டிச., 10 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய அரசு கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர். இதற்கிடையில் வி.ஏ.ஒ..,க்கள் பரிந்துரையை உட்பிரிவு மாறுதலுக்கு அனுமதிப்பதற்கு எதிராக நில அளவையர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு துறையினரிடையே மோதல் சூழ்நிலை எழுந்தது. 
இந்நிலையில் பட்டா உட்பிரிவு மாறுதலுக்கு, வி.ஏ.ஒ.,க்கள் இன்றி நில அளவை கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. நவீன நில அளவை கருவிகள் மூலம், துல்லியமான அளவை பணிக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், வி.ஏ.ஒ., பரிந்துரை தேவையில்லாததாகவும், மக்களுக்கு கால விரையமாகவும் உள்ளது என நில அளவை அலுவலர்கள் கண்டனம் தெரிவித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு நிர்வாகிகள் சசீதரன் கூறியதாவது: நீதிமன்ற வழக்குகளில் வி.ஏ.ஒ.,க்கள் ஆஜராகுவதால் அவர்கள் பரிந்துரை தேவை என கூறுவது, உட்பிரிவு பட்டா மாறுதல் பணியை பின்னோக்கி தள்ளுவதற்கு ஒப்பாகும். ஒரு கிராமத்தில் அனைத்து புல எண்களிலும், நீதிமன்ற வழக்குகள் இல்லை. நில அளவர் ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிந்த ஆவணங்களை மட்டுமே, உட்பிரிவு செய்கிறார். 
வழக்குகள் நிலுவையில் இருந்தால் அந்த புலஎண்ணிற்கான ஆவணங்களை சார்பதிவாளர் பதிவு செய்யாமல் தவிர்க்கலாம். நில அளவர் உட்பிரிவு பணியை தொழில் நுட்ப ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் செய்யும் நிலையில், அனைத்து துறையினருக்கும்(போலீஸ் உட்பட) வழங்கப்படும் நிலஅளவை பயிற்சியில், பயிராய்வுக்காக ஒரு மாதம் மட்டும் பயிற்சி பெறும் வி.ஏ.ஒ.,க்கள் பரிந்துரை என்பது கேலிக்கூத்து. உயர்நீதிமன்றம் மதுரை கிளை, உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு வி.ஏ.ஓ.,க்கள் பரிந்துரை தேவையில்லை என தீர்ப்பு வழங்கி உள்ளது என்றார்.

Label