OUR CLIENTS
பொதுசேவை வாகனத்தில் கருவிகள் பொருத்தும் திட்டம் அறிமுகம்!
பொதுசேவை வாகனத்தில் கருவிகள் பொருத்தும் திட்டம் அறிமுகம்! Posted on 05-Jan-2019 பொதுசேவை வாகனத்தில் கருவிகள்  பொருத்தும் திட்டம் அறிமுகம்!

புதுச்சேரி, ஜன.5-

புதிதாக பதிவு செய்யப்படுகின்ற பொது சேவை வாகனங்களில் இருப்பிடம் கண்டறியும் கருவி மற்றும் அவசரகால பட்டன் பொருத்தும் திட்டம் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது.

பொது சேவை வாகனங்களில் வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் கருவி மற்றும் அவசரகால பட்டன் ஆகியவற்றை பொருத்தும் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் கடந்த 1ம் தேதியில் இருந்து, நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. 
புதுச்சேரியிலும் இருப்பிடம் கண்டறியும் கருவியும், அவசரகால பட்டனும் பொருத்தினால் மட்டுமே புதிதாக வாங்கப்படுகின்ற பொதுசேவை வாகனங்களை பதிவு செய்ய முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள பொதுசேவை வாகனங்களை பொறுத்தவரை இருப்பிடம் கண்டறியும் கருவி மற்றும் அவசரகால பட்டனை பொருத்துவதற்கான காலக் கெடுவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்கின்ற பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள், வாடகை கார்கள் போன்றவை பொதுசேவை வாகனங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. இந்த வாகனங்களில் பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருப்பிடத்தை அறியும் கருவி, அவசரகால பட்டன் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த கருவியை பொருத்துவதன் மூலமாக சம்பந்தப்பட்ட வாகனங்கள் எங்கே செல்கின்றன. எந்தெந்த இடங்களில் நிற்கின்றன என வாகனங்களின் உரிமையாளர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். மேலும் போக்குவரத்து நெரிசல், மாற்று பாதை உள்ளிட்ட விஷயங்களை டிரைவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அம்சங்களும் எதிர்காலத்தில் சேர்க்கப்பட உள்ளன.
அதேபோல சம்பந்தப்பட்ட பொதுசேவை வாகனங்களின் இயக்கம் தொடர்பான விபரங்கள் அனைத்தும் அரசின் டேட்டா சென்டரில் பதிவாகும். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். விபத்து, தாக்குதல் போன்ற ஆபத்தான நேரங்களில் அவசரகால பட்டனை அழுத்தினால் அருகில் இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு ஆட்டோமேட்டிக்காக தகவல் செல்லும் வகையிலும் வசதிகள் செய்யப்பட உள்ளது.புதுச்சேரியை பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இருப்பிடத்தை கண்டறியும் கருவி அனுப்பும் தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் சேகரித்து பயன்படுத்த முடியும்.

Label