விஜயகாந்துக்கு கிட்னி மாற்று ஆப்பரேஷன்! Posted on 05-Jan-2019
சென்னை, ஜன.5-
உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த்திற்கு விரைவில் கிட்னி மாற்று ஆப்பரேஷன் நடக்க இருக்கிறது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சென்னையில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசையின் கணவரான சிறுநீரக சிகிச்சை நிபுணர் சவுந்தர்ராஜன் தான் விஜயகாந்துக்கு சிகிச்சை அளித்து வந்தார். விஜயகாந்த்துக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என கூறிவிட்டார்.
இதனால் சில மாதங்களுக்கு முன்பாகவே விஜயகாந்த் அமெரிக்கா சென்றுவிட்டார். கிட்னி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு கிட்னி கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் தனது நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியுள்ள விஜயகாந்தும் அவரது குடும்பத்தினரும் இந்த மாதம் இறுதியில் ஆப்பரேஷன் முடித்துவிட்டு ஒரு மாதம் ஓய்வும் எடுத்துவிட்டு மார்ச் முதல்வாரத்தில் தமிழக திரும்ப உள்ளனர். விரைவில் புதுத்தெம்போடு விஜயகாந்த்தை காணலாம் என்கிறார்கள்.