OUR CLIENTS
சைக்கிள் பழுது நீக்கும் தொழிலாளர்கள் மாயம்!
சைக்கிள் பழுது நீக்கும் தொழிலாளர்கள் மாயம்! Posted on 05-Jan-2019 சைக்கிள் பழுது நீக்கும் தொழிலாளர்கள் மாயம்!

செங்கல்பட்டு, ஜன.5-

செங்கல்பட்டில் இரு சக்கர வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்ததால் மிதிவண்டிகளில் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் அரசு சார்பில் வழங்கப்படுவதால் ஏராளமானோர் சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர்.அதே சமயத்தில் தொழில் ரீதியாக இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணியாளர்களுக்கு உள்ள மரியாதை சைக்கிள்களை பழுதுபார்ப்பவர்களுக்கு இல்லை என்ற நிலை உள்ளதாக தொழிலாளர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து செங்கல்பட்டைச் சேர்ந்த சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலாளி குணசீலன்( 66) என்பவர் கூறியதாவது:அரக்கோணம் சொந்த ஊர். முன்னர் அங்கு 200க்கும் மேற்பட்ட சைக் கிள் பழுது பார்க்கும் கடைகள் இருந்ததால் வருமானம் குறைவாக கிடைத்தது. ஒரு நாளைக்கு ஒரு சைக்கிள் சர்வீஸ் செய்வதற்கு 400 ரூபாய் கிடைக்கும்.
சிறிய பழுதுகள் பார்க்கும் போது கூடுதலாக 200 ரூபாய் கிடைக்கும்.இதை வைத்து குடும்பம் நடத்தி வருகிறேன். மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்துள்ளேன். மகனுக்கு திருணம் செய்யவுள்ளேன். வயதான காலத்தில் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு குணசீலன் தெரிவித்தார்.

Label