OUR CLIENTS
புதிய துணைமின்நிலையத்தால் விவசாயம் செழிக்க வாய்ப்பு!
புதிய துணைமின்நிலையத்தால் விவசாயம் செழிக்க வாய்ப்பு! Posted on 05-Jan-2019 புதிய துணைமின்நிலையத்தால் விவசாயம் செழிக்க வாய்ப்பு!

திருவள்ளூர், ஜன.5-

நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள மலையோர கிராமங்களில் தண்ணீர் வளம் இருந்தும் போதுமான மின்வசதி இல்லாததால், பாதிக்கப்பட்டு வந்த விவசாயம், புதிய துணை மின் நிலையத்தால், இனி செழிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தாண்டில் செயல்பாட்டிற்கு வர உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், புதூர் மேடு, விளக்கணாம்பூடி புதூர் உள்ளிட்ட பகுதிகளில், துணை மின் நிலையங்கள் அமைந்துள்ளன.ஆனால், ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள பாலாபுரம், காட்டூர், அம்லேரி, மகன்காளிகாபுரம், தாமனேரி மற்றும் அதை சுற்றியுள்ள, 38 கிராமங்களுக்கு, மின்வினியோகம் தொலைதூரத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கிராமங்கள், மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால், தண்ணீர் மிக சுவையாக உள்ளது. அருகில், ஆந்திர மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்தும் இங்குள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து உள்ளது.தேவையான தண்ணீர் வளம் உள்ளதால், விவசாயம் செழிப்பாக நடந்து வருகிறது. இருப்பினும், தண்ணீரை இறைக்க மின் மோட்டார்களும் அவற்றை இயக்க மின்சாரமும் அவசியம் ஆகிறது. 
துணை மின் நிலையத்தில் இருந்து வெகுதொலையில் அமைந்துள்ள கிராமங் களுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் அழுத்தம் குறைவாக இருந்து வருவதால், விவசாயிகள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.மேலும், கடைக்கோடி பகுதியில், மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பாலாபுரம் பகுதிக்கு தேவையின்றி மின் வினியோகத்தை துண்டிக்கும் நிலை உள்ளது.இதனால், பாலாபுரம் பகுதியில், புதிய துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதன்படி, தற்போது, பாலாபுரம் மலையடிவாரத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள், 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள், செயல் பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 
உயர்அழுத்த மின்பாதைக்கான மின்கம் பங்களும், புதிதாக நடப்பட்டு, தயார் நிலையில் உள்ளனஇந்த புத்தாண்டில், பாலாபுரம் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும் சூழல் உருவாகி உள்ளது. புதிய துணை மின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததும், எல்லையோர குக்கிராமங்களில், விவசாயம் மேலும் செழிக்கும் என்பது உறுதி.

Label