OUR CLIENTS
தேர்தலுக்கு முன் போலீசார் மாற்றம்?
தேர்தலுக்கு முன் போலீசார் மாற்றம்? Posted on 05-Jan-2019 தேர்தலுக்கு முன் போலீசார் மாற்றம்?

காஞ்சிபுரம், ஜன.5-

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் சரக காவல் நிலையங்களில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன் காவல் துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள், பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2016ல் சட்டசபை தேர்தலில் காஞ்சிபுரம் காவல் சரகத்தில் தேர்தலுக்கு முன் 40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 
அது போல் இந்தாண்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்கள் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றுவோர் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.அடுத்த மாதம் இதற்கான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Label