சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து நோட்டீஸ் Posted on 05-Jan-2019
ரியாத், ஜன.5-
விவாகரத்து வழக்கில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீஸ் அனுப்ப சவுதி அரேபியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சவுதி அரோபியாவில் ஆண்களில் சிலர் தனது மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடரும் போது மனைவிகளிடம் தெரிவிப்பது இல்லை. இதனால் பெண்களின் உரிமையும் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சீரமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அங்கு பெண்கள் உரிமையை நிலை நாட்ட புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவாகரத்து பிரச்சினையில் நீதிமன்றத்தில் மனு செய்தவுடன் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீசு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தகவலை சவுதி அரேபியாவை சேர்ந்த வக்கீல் ஒருவர் தெரிவித்துள்ளார்.