OUR CLIENTS
கஜா புயல் சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கஜா புயல் சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Posted on 05-Jan-2019 கஜா புயல் சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, ஜன.5-

கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 2018இல் வீசிய கஜா புயல் பாதிப்பு குறித்து, சட்டசபையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன.  அதிமுக அரசு தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி, மத்திய அரசிடமிருந்து புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடுதல் நிவாரணத் தொகையை பெற வேண்டும் என திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன் பேசினார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலின் போது 471 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கான இழப்பீடு நிவாரணத் தொகையை ரூ.85,000த் திலிருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

Label