OUR CLIENTS
பாம்பன் ரயில் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம்
பாம்பன் ரயில் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம் Posted on 07-Jan-2019 பாம்பன் ரயில் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம்

பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது என ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் உள்ள பாம்பன் ரயில் தூக்குப் பாலம் கடந்த மாதம் 4 ஆம் தேதி பழுதடைந்தது. இதையடுத்து, ராமேசுவரம் வரும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
மேலும் இந்திய ரயில்வே தலைமை பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பாம்பன் தூக்குப் பாலம் திறந்து மூடும் சோதனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பாம்பன் பாலம் வழியாக மீண்டும் ரயில் சேவையை இயக்குவது குறித்து திங்கள்கிழமை பயணிகள் இல்லாத ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சோதனைக்கு பின்னர் பயணிகளுடன் ரயில் இயக்குவது குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர் விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Label