OUR CLIENTS
வாடகை தாய் நடைமுறை அதிகரிப்பு மத்திய அரசின் சட்டத்தால் நெருக்கடி
வாடகை தாய் நடைமுறை அதிகரிப்பு மத்திய அரசின் சட்டத்தால் நெருக்கடி Posted on 07-Jan-2019 வாடகை தாய் நடைமுறை அதிகரிப்பு மத்திய அரசின் சட்டத்தால் நெருக்கடி

சென்னை, ஜன.7-

வணிக ரீதியான வாடகைத்தாய் முறைக்கு தடை விதிப்பது மனநோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர் கூறினார். 

மத்திய அரசு வணிகரீதியான வாடகை தாய் முறைக்கு தடை விதித்து, விதிகளை உருவாக்கி டிச.19 ம் தேதி மக்களவையில் மசோதாவை நிறைவேற்றியது. இந்நிலையில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அது சட்டமாக மாறும்.  இந்நிலையில் வாடகைதாய் முறை தொடர்பாக இதுவரை எந்த சட்டமும் நம் நாட்டில் இல்லை, கண்காணிக்க அரசு அமைப்பு ஏதுமில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலில் விதிகளில் ஒரு வரியில் மட்டுமே வாடகைத்தாய் முறை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் எவ்வளவு பேர் வாடகை தாய் உள்ளனர் என்ற தரவுகள் நம்மிடையே இல்லை.
டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் மட்டுமே வாடகை தாய் நடைமுறை இருந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்திலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத்தர ஏராளமான மருத்துமவனைகள் வந்துவிட்டன.  ஆனால் பல்வேறு பிரச்னைகளுடன் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நம் நாட்டில் 60 சதவீதம் வரை வாடகை தாய் மூலம் வெற்றிகரமான மகப்பேறு சிகிச்சை நடக்கிறது. வெளிநாடுகளில் இந்த அளவு வெற்றிகரமான மகப்பேறு விகிதம் இல்லை. 
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால், இங்கு வாடகை தாய்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் வாடகை தாய் மூலம் குழந்தை பேறு இங்கு பல கோடி ரூபாய் புழங்கும் லாபகரமான தொழிலாக உள்ளது. இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் பாராட்டக்கூடிய வகையிலும், சில விஷயங்கள் ஏற்க முடியாத வகையிலும் உள்ளது. ஒரே ஒரு முறை தான் ஒரு பெண், வாடகைத்தாயாக இருக்க முடியும் என்றும், அந்த பெண் ஏற்கனவே ஒரு குழந்தையாவது பெற்று இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஒரு பெண் பணத்துக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வாடகைத் தாயாக இருப்பது அல்லது இருக்க நிர்பந்திப்பது தடுக்கப்படுகிறது. 
அதே நேரத்தில் இந்த மசோதாவில் எராளமான குறைகள் உள்ளன. வாடகைத்தாயாக இருப்பவர் சம்பந்தபட்ட கணவன் அல்லது மனைவிக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது வணிகரீதியான வாடகை தாய் முறையை தடை செய்கிறது. நெருங்கிய உறவினர் வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்க மாட்டார்கள். இதனால் குழந்தை இல்லாத தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் குழந்தை இல்லாமல் கடும் மனஉளைச்சலுடனோ, அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோ வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்படும். மகப்பேறு காலத்தின் போதும், குழந்தைபேறுக்கு பின்னரும் வாடகை தாய்க்கான இன்சூரன்ஸ், கனிவான மருத்துவசேவை தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை.  
அதே நேரத்தில் வாடகைத்தாய்க்கு சம்பளமாக முடிவு செய்யப்பட்ட பணம் முழுவதும் அவர்களுக்கு போகிறதா என்பதை கண்காணிப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. வாடகைத்தாய்களுக்கு நலவாரியம், அவர்களுக்கான பென்சன் உள்ளிட்ட பணப்பலன்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. வாடகைத்தாய்களுக்கு ஆலோசனை மையம் அமைப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நடைமுறைகள் இல்லாமல் வாடகைத்தாய் மசோதா முழுமை பெறாது. வாடகைத்தாய் முறையில் ஏற்கனவே நடந்த பல்வேறு தவறுகள் தொடர வாய்ப்புள்ளது. 
பணப்பிரச்னையால் வாடகைத்தாயான 90 சதவீதம் பேர் பொருளாதாரம், கல்வியறிவில் பின்தங்கியவர்கள் மட்டுமே வாடகை தாயாக மாறுகிறார்கள் என்று சொல்வது தவறு. நல்ல கல்வியறிவு ஓரளவு பொருளாதாரம் இருந்தும் கடன் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் வாடகை தாய் ஆகிறார்கள்.  உலகில் 26 நாடுகளில் வாடகைதாய் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் முதலில் டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் மட்டுமே வாடகை தாய் நடைமுறை இருந்தது. ஆனால்  கடந்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்திலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத்தர ஏராளமான மருத்துமவனைகள் வந்துவிட்டன.  அயல்நாட்டில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற சுமார் ரூ.75 லட்சம் செலவாகிறது என்றால், நம் நாட்டில் ரூ.15 லட்சம் மட்டுமே செலவாகிறது.
இந்நிலையில்  மத்திய அரசு வணிகரீதியான வாடகை தாய் முறைக்கு தடை விதித்து, விதிகளை உருவாக்கியுள்ளதால் , வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத்தரும் மருத்துமவனைகளுக்கு நெருக்கடி ஏற்றபட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். மத்திய அரசு விதித்த விதிகளுக்கு உட்பட்டு செயல்பட மிகவும் கடினாமான சவாலாக உள்ளது. இதனால் ஒருபுறம் பணத்திற்காக பெண்களை நிர்பந்திக்கும் செயல்கள் தடுக்கப்படுகின்றன. வியாபார நோக்குடன் செயல்படும் மருத்துவமனைக்களுக்கு மிகவும் நெருக்கடியாக அமைந்துள்ளது. 2017ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செயற்கை கருவூட்டல் மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 46 வாடகை தாய்களை போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று செயற்கை கருத்தரிப்புகளுக்கும் மத்திய அரசு விதிகளை விதிக்க வேண்டும்.  கருத்தரிப்பு மருத்துவமனைகளில் ஏராளமான தவறுகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வியாபார நோக்குடன்தான்  பல கருத்தரிப்பு மருத்துவமனைகள் செயல்படுவதாகவும்,  பல தவறுகள் நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஒவ்வொரு கருதரிப்புக்குமே லகரங்களில்தான் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றனர். அவ்வாறு செலவு செய்தும் முழுமையாக குழந்தை பெற்றெடுக்க உத்தரவாதம் இல்லாமல் பெற்றோர்கள் அங்கலாய்கின்றனர். அன்மையில் வேலூரில் ஒரு மருத்தவமனையில் செயற்கை கருத்தரிப்பால் இரு குழுந்தைகள் பெற்றெடுத்த தாயின் நிலைமையும், குழந்தைகள் நிலைமையும் மிகவும் கேள்வி குறியானது....?  
ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தைபேறுதான் முக்கியமான ஒன்றாகும். இது மனரீதியாகவும், வாழ்க்கை முழுமைபெறவும் ஒன்றாகும். இதை லாப நோக்குடன் செயல்படும் மருத்துவமனைகளுக்கும், பெண்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு,  பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு அனைத்து கோணங்களில் ஆராய்ந்து விதிகளை விதிக்கவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும். 

Label