OUR CLIENTS
உரிமம் இன்றி செயல்பட்ட கடைகளுக்கு சீல்! மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
உரிமம் இன்றி செயல்பட்ட கடைகளுக்கு சீல்! மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை Posted on 07-Jan-2019 உரிமம் இன்றி செயல்பட்ட கடைகளுக்கு சீல்! மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பள்ளிக்கரணை, ஜன.7-

வாடகை செலுத்தாமலும், உரிமம் இன்றியும் இயங்கிய, 14 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

பள்ளிக்கரணை, வேளச்சேரி பிரதான சாலை, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில்  மாநகராட்சிக்கு சொந்தமான  30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவை  ஏல ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. அதில் உள்ள  10 கடை உரிமையாளர்கள்  ஓராண்டிற்கு மேலாக வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர். மேலும்  நான்கு கடைகள்  மாநகராட்சியின் உரிமம் பெறாமல் இயங்கி வந்தன. 
இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன், பெருங்குடி மண்டல வருவாய் துறையினர்  சம்பந்தப்பட்ட கடைகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பினர். ஒரு வாரத்திற்கு முன்  எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும், 24 மணி நேர கெடு அளித்தும்  கடை உரிமையாளர்கள் கண்டு கொள்ளவில்லை .இதனால்,  மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் பிரகாஷ் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள்  பள்ளிக்கரணை போலீசார் பாதுகாப்புடன் 14 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.  

Label