OUR CLIENTS
தலைவர்களின் பிறந்த நாள் இளைஞர்கள் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தலைவர்களின் பிறந்த நாள் இளைஞர்கள் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு Posted on 07-Jan-2019 தலைவர்களின் பிறந்த நாள் இளைஞர்கள் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சங்கரன்கோவில், ஜன.7-

தலைவர்களின் பிறந்தநாள் இளைஞர்கள் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா  பிறந்தநாள் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, நேற்று நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
பேரறிஞர் அறிஞர் அண்ணா பிறந்த நாள், கலைஞர் பிறந்த நாள் என்பது ஏதோ ஒரு கட்சிக்கு மட்டும் பயன்படக்கூடாது, தனிப்பட்ட அரசியலுக்கும் அதை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது அது இளைஞர் சமுதாயத்திற்கும் மாணவர் சமுதாயத்திற்கும் தலைவர்களுடைய பிறந்த நாள் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு இளைஞர் அணியின் சார்பில் அதற்கென்று ஒரு அறக்கட்ட ளையை உருவாக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்றைக்கு தலைவர் என்கின்ற அந்தப் பொறுப்பில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தாலும், இளைஞர் அணியினுடைய சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றேன் என்று சொன்னால், என்னுடைய வளர்ச்சி என்பது, திடீரென்று ஒரு மிகப்பெரிய பொறுப்பிற்கு நான் உடனடியாக வந்துவிடவில்லை, படிப்படியாகத்தான் வளர்ந்து வந்திருக்கின்றேன். அதிலும் என்னுடைய வளர்ச்சி என்பது, தலைவர் கலைஞர் ஒரு மாணவனாக தன்னுடைய பொது வாழ்க்கையை தொடங்கினாரோ, அதேபோல் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது கோபாலபுரத்தில் இளைஞர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு மூலமாக பொது வாழ்க்கையை தொடங்கி அதற்குப் பிறகு இளைஞர் அணியில் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயலாளராக இருந்து இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து வந்திருக்கின்றேன். இந்த அளவிற்கு நான் உயர்ந்து வந்திருக்கின்றேன் என்பதற்கு முழுக்காரணம் இளைஞர் அணியில் அந்தப் பொறுப்பில் இருந்ததுதான். இதை நான் சொல்வதற்குக் காரணம் படிப்படியாகத் தான் வளர்ச்சி இருக்க வேண்டும்.
இன்றைக்கு நான் எவ்வளவு பொறுப்பிற்கு சென்றாலும் இளைஞர் அணி என்று வருகின்றபோது பிறந்த வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய அந்த உணர்வைத்தான் நான் பெறுகின்றேன்.
அந்த இளைஞர் அணி என்பது என்னைப் பொறுத்தவரையில் அதை இளைஞர் அணி என்றுகூட சொல்லமாட்டேன், கழகத்தினுடைய இதய அணி என்று தான் சொல்லத்தோன்றுகின்றது.
ஏனென்றால் இன்றைக்கு அரசியல்வாதிகளாக இருக்கக்கூடிய எங்களைவிட மாணவர் சமுதாயத்தில் இளைஞர் சமுதாயத்தில் இருக்கக்கூடிய உங்களுக்குத்தான் இன்னும் அதிகமாக அரசியலை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு வந்து சேர்கின்றது என்பதை நாம் மறுத்திட & மறைத்திட முடியாது.
உங்களை எல்லாம் நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக்கொண்டு. பரிசு பெற்றிருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்லுவதற்கு மட்டுமல்ல, அந்தப் பரிசுகளை பெற முடியாத நிலையில் இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து சொல்லவேண்டியது என்னுடைய கடமை.
மாவட்ட மாநில அளவில் பரிசு பெற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைறீபீ தெரிவித்து, தொடர்ந்து இதுபோன்ற தனித்திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் நீங்கள் பல முன்னேற்றங்களை பெற வேண்டுமென வாழ்த்தி இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன். இவ்வாறு, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நெல்லை மேடையில் மாணவர்களிடையே பேசினார்.

Label