OUR CLIENTS
மத்திய அரசின் புதிய மின் சட்டத்தை எதிர்த்து 8, 9ம் தேதிகளில் இந்திய அளவில் வேலைநிறுத்தம்
மத்திய அரசின் புதிய மின் சட்டத்தை எதிர்த்து 8, 9ம் தேதிகளில் இந்திய அளவில் வேலைநிறுத்தம் Posted on 07-Jan-2019 மத்திய அரசின் புதிய மின் சட்டத்தை எதிர்த்து  8, 9ம் தேதிகளில் இந்திய அளவில் வேலைநிறுத்தம்

சென்னை, ஜன.7-

மத்திய அரசை கண்டித்து மின்கழக தொ.மு.ச, தொ.மு.ச பேரவை, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட, 12 சங்கங்கள் வரும், 8, 9ம் தேதிகளில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. 

இதுகுறித்து தொ.மு.ச பொதுச் செயலாளர் ரத்தினசபாபதி வெளி யிட்டுள்ள அறிக்கை: நாடாளு மன்றத்தில் மின்சாரச் சட்டம் திருத்தப்பட்டு, மின் உற்பத்தியை தற்சமயம் மின்வாரியங்கள்  மற்றும் மத்திய அரசும் செய்துவருகிறது.  ஆனால், அதே நேரத்தில் தனியாரும் மின் உற்பத்தி செய்து மின்சாரத்தை அதிக விலைக்கு விற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் மோடி அரசு கடந்த, 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மின்சாரச் சட்டத்தை திருத்தி மின்சாரச் சட்டம் 2014 என்று ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றிட  முயற்சி செய்தது.  இடையில் நாடாளுமன்றத்தின் நிலைக்குழு என்ற குழு டாக்டர் சோமையா என்பவர் தலைமையில் கூடிய குழு தனது அறிக்கையினை 2015ம் தேதி பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு தனது அறிக்கையினை பாராளு மன்றத்தின் தலைவரிடம் சமர்ப்பித் துவிட்டது. இந்நிலையில் பழைய மசோதாவை மின்சாரச் சட்டம் 2018 என்று திருத்தக் கூடாது என்று போராடினோம். 
எங்களுக்குள்ள பயம் என்னவென்றால் அரசு பாராளுமன்ற தேர்தல் 2019ல் நடக்கும் என்பதால் இந்த சட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டும் என்று நினைக்கிறோம். இந்த சட்டத்தினால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், மின் பகிர்மானம் பிரிக்கப்பட்டு, எல்லா மாவட்டத்திலும் தனியாரிடம் மின் விநியோகம் தரப்படும். இதனால் இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள் சுமார் 21 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள், குடிசையில் வாழும் சுமார் 12 லட்சம் குடிசைவாசிகள் இலவசமாக பெறுவதும் நிறுத்தப்படலாம். பணி செய்யும் பொறியாளர்கள் தொழிலாளர்கள் இன்று சுமார் 10 லட்சம் பேர் பணி செய்கின்றனர்.  தனியாரிடம் சென்றால் அவர்கள் குறைந்த சம்பளத்தில் ஆட்களை நியமித்திட மின்வாரிய ஆட்களை வேண்டாம் என்று நிறுத்திவிடும் என்ற ஆபத்து காத்திருக்கிறது.
ஒப்பந்தத் தொழிலாளர் பணி நியமனம் இருக்காது.  கிராம மக்கள் மின்சாரம் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். தொழிற்சங்க உரிமைகளை பொதுத்துறையில் பெறுவதைப் போல் தனியாரிடம் நிச்சயம் பெற இயலாது. தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு நிச்சயம் கிடைக்காது. மேலும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலவசங்களுக்கு மூன்றாண்டுகள் வரை தான் அனுமதி. பின்னர் ரத்து செய்யப்படும். இதேபோல் புதிய சட்டத்தால் போக்குவரத்தில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். அதாவது கார், பஸ்கள் மோட்டர் பைக்குகளை தனியாரிடம் தான் பதிவு செய்ய வேண்டும்.  ரிப்பேர் என்றால் வண்டி வாங்கிய கம்பெனியில் ரிப்பேர்  செய்யவேண்டும். 
தற்போது ஜி.எஸ்.டி வரியாலும், பெட்ரோல், மற்றும் டீசல் விலை தினம் தினம் உயர்வதாலும் அன்றாடம் மக்கள் அவதிப்படுகிறார்கள்.  மேற்கண்ட இரண்டு சட்டங்களும் நிறைவேறினால் மின்சாரத் தொழிலாளி பொறியாளர்கள் இதேபோல போக்குவரத்துக்கழக தொழிலாளர்களும் பொது மக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வரும் ஜனவரி, 8, 9ம் தேதிகளில் அகில இந்திய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்கிறோம்.  இதில், மின்கழக தொ.மு.சங்கம், சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யு.சி, ஜனதா சங்கம், கணக்காயர் சங்கம் என 12 மின்வாரியச் சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Label