OUR CLIENTS
போலி ஏடிஎம் கார்டு தயாரித்த பீகார் மோசடி கும்பல் கைது
போலி ஏடிஎம் கார்டு தயாரித்த பீகார் மோசடி கும்பல் கைது Posted on 07-Jan-2019 போலி ஏடிஎம் கார்டு தயாரித்த பீகார் மோசடி கும்பல் கைது

சென்னை, ஜன.7-

போலி ஏடிஎம் கார்டு தயாரித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 9 பேர் கொண்ட கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடிப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து என்கோடர் மிஷின் மூலம் ஏடிஎம் கார்டு டேட்டாக்களைத் திருடி பணம் அபேஸ் செய்தது தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலி ஏடிஎம் மூலம் பணத்தை அபகரிக்கும் கும்பல் பற்றிய புகார்கள் வந்து குவிந்தன. அதில் வந்த ஒரு புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடிப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை பெருங்குடியில் உள்ள எஸ்.பி. இன்போ டெக் என்ற ஐடி கம்பெனி வளாகத்தில் போலி ஏடிஎம் கார்டுகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.
 இதனையடுத்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூடுதல் துணைக்கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் அங்கு மாறுவேடத்தில் சென்று பொருட்கள் வாங்குவது போல நடித்தனர்.
 பொருட்களை வாங்கி விட்டு அதற்குரிய பணத்தை ஏடிஎம் கார்டு மூலம்தான் செலுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் தங்களிடம் இருந்த ஏடிஎம் கார்டு ஒன்றை கொடுத்துள்ளனர். அதனை வாங்கிய கடை ஊழியர்கள் தங்களிடம் உள்ள ஸ்கிம்மர் கருவி மூலம் கார்டில் உள்ள டேட்டாக்களை திருடி அதன் மூலம் போலி ஏடிஎம் கார்டு தயாரித்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் இந்த மோசடி தொடர்பாக ராகுல் சிங், குந்தன்சிங், சுரேஷ்குமார், ராகுல் குமார், சுதிர், பிகாஷ் குமார், குந்தன் குமார், ராம்பீர்குமார், விபின் குமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், ஸ்கிம்மர் கருவி, செல்போன், டெபிட்கார்டு மற்றும் ரொக்கம் ரூ. 1.48 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருட்டு கும்பலிடம் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட கடையில் வாடிக்கையாளர்கள் தரும் ஏடிஎம் கார்டுகளில் இருந்து என்கோடர் மற்றும் ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்படும் டேட்டாக்களை லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளனர். அதன் மூலமாக போலி ஏடிஎம் கார்டு தயாரித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏடிஎம்மில் பணம் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. 9 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
விசாரணைக்குப்பின்னர் 9 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Label