OUR CLIENTS
07-01-2019 முதல் 13-01-2019 வரை
07-01-2019 முதல் 13-01-2019 வரை Posted on 07-Jan-2019 07-01-2019 முதல் 13-01-2019 வரை

மேஷம்

இன்னும் சில வாரங்களுக்கு ராசி நாதன் செவ்வாய் குருபார்வை, குருவுடன் பரிவர்த்தனை எனும் அமைப்பில் சுபத்துவம் பெற்றிருப்பார் என்பதாலும் அதனையடுத்து ராசியிலேயே அமர்ந்து நல்ல பலன்களைத் தருவார் என்பதாலும் மே‌ஷராசிக்கு தீமைகள் எதுவும் நடக்காத நல்ல வாரம் இது. கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு நடக்க வாய்ப்பில்லை. எனவே மே‌ஷத்தினர் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மட்டும் மனதில் நிறுத்தி முன்னேற்றப்பாதையில் நடை போடுவீர்கள். மே‌ஷத்தின் யோக வாரம் இது.
சிலருக்கு வீடு வாங்குவது வி‌ஷயமாக லோன் வாங்க வேண்டியிருக்கும். வேலை இடங்களில் சிரித்துப் பேசி உங்களை கவிழ்க்கப் பார்க்கும் எதிரிகள் உருவாவார்கள். கவனமாக இருங்கள். சுக்கிரன் எட்டில் இருப்பதால் பெண்கள் வி‌ஷயத்தில் செலவுகளும் மனம் வருத்தப்படும்படியான நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதோடு இவற்றிற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 ரிஷபம்

ரி‌ஷபராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. மனவருத்தம் தரும் எதுவும் இந்த வாரம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. பணவரவுக்குத் தடையாக இருந்த வி‌ஷயங்கள் இனி நீங்கும். வியாபார முன்னேற்றத்திற்காக கடன் கேட்டிருந்தவர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இப்போது நடைபெறும். குருபகவான் தயவால் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் எந்தவித சிக்கலும் இன்றி நல்லபடியாக நடக்கும். சிலருக்கு அடிப்படையிலேயே நல்ல மாற்றங்கள் இருக்கும்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். சிலர் இந்த வாரம் கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். ஆன்மீக வி‌ஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகுசிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். தொழில் இடங்களில் அன்னிய மத, இன, மொழி நண்பர்களால் உதவிகளும் சந்தோ‌ஷங்களும் இருக்கும்.
மிதுனம்

மிதுனத்திற்கு இது நல்ல வாரம் தான். கெடுபலன்கள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. இனி உங்களுக்கு அனைத்திலும் நல்ல பலன்களே நடக்கும். குறிப்பாக உங்களில் சிலருக்கு கடன் பிரச்னைகள் இனி தீர ஆரம்பிக்கும். தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும்.
கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். 8,9,10 ஆகிய நாட்களில் பணம் வரும். இன்று அதிகாலை 12.24 முதல் 9ம்தேதி மதியம் 1.15 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.
கடகம்

வாரம் முழுவதும் யோகக் கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் இந்த வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம தினங்களாக இருந்தாலும் இது கடகத்திற்கு யோக வாரம்தான். நீண்டகாலமாக செய்ய நினைத்திருக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்கால திட்டங்களை செயல்படுத்த இது நல்ல நேரம். இதுவரை நிறைவேறாமல் சாக்கு,போக்கு காட்டிக்கொண்டிருக்கும் அடிப்படை வி‌ஷயங்கள் அனைத்தும் மனம்போல நிறைவேறும். யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் அனைத்து வி‌ஷயங்களும் நல்லபடியாக நடக்கும்.
சிலருக்கு லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகள் இருக்கும். தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். 7,10,11 ஆகிய நாட்களில் பணம் வரும். 9ம்தேதி மதியம் 1.15 முதல் 12ம்தேதி அதிகாலை 2.03 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் சொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
சிம்மம்

குரு, செவ்வாய் பரிவர்த்தனையால் சிம்மத்திற்கு இது கெடுபலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். அதேநேரத்தில் ராசிநாதன் சனியுடன் இணைந்திருப்பதால் தேவையற்ற மனக்கலக்கங்களும் இருக்கும். குரு எட்டாமிடத்தைப் பார்ப்பதால் ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்று கடைசி நிமிடம் வரை குழப்பத்தில் வைத்திருந்தே நல்லவை நடக்கும். சனியும் ஐந்தில் இருப்பதால் உங்கள் எதிரிகள் கை ஓங்குவது போலத் தெரிந்தாலும் இறுதியில் வெற்றி என்பது உங்கள் வசம்தான்.
வார இறுதியில் கடன் கலக்கம் உண்டு. அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை பிறரைச் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனி சுயமாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். 11,12 ஆகிய நாட்களில் பணம் வரும். 12ம் தேதி அதிகாலை 2.03 முதல் 14ம் தேதி மதியம் 12.52 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். ஆயினும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.
 கன்னி

அடுத்தவருக்கு உதவி செய்து நீங்கள் நல்ல பெயர் எடுக்கும் வாரமாக இது இருக்கும். பிறருக்கு உதவிகள் செய்து அதன் மூலம் சந்தோசம் அடைவீர்கள். பெண்கள் வழியில் செலவுகள் இருக்கும். என்ன செலவு வந்தாலும் வருமானம் கண்டிப்பாக குறையாது. பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. சிலருக்கு தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம்.
அடுத்தவரின் தயவு மற்றும் ஆலோசனை இல்லாமல் உங்களின் சொந்த அனுபவத்தில் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் வியாபாரம் சூடுபிடிக்கும். போட்டியாளர்கள் ஒழிவார்கள். புதிய கிளைகள் ஆரம்பிப்பீர்கள். சிலருக்கு புதிய வாகனம் அமையும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய வி‌ஷயத்திலும் அலட்சியம் வேண்டாம்.
 துலாம்

எதிர்பார்த்த பணவரவுகளையும் தொழில் முன்னேற்றங்களையும் தரும் என்பதால் துலாத்திற்கு சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரம் இது. உங்களில் சிலருக்கு வேலைமாற்றம், தொழில்மாற்றம், வீடுமாற்றம் போன்றவைகள் இப்போது உண்டு. இளைய சகோதர, சகோதரிகள் வி‌ஷயத்திலும் நல்லவைகள் இருக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும் என்பதால் யாருக்கும் எதுவும் தருவதாக ப்ராமிஸ் செய்ய வேண்டாம்.
ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக அரசுத் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கும் நல்ல பலன்கள் உண்டு.
விருச்சிகம்

விருச்சிகத்திற்கு இந்த வாரம் கெடுதல்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. பிறந்த நேர ஜாதகப்படி சாதகமற்ற பலன்கள் சிலருக்கு நடந்து கொண்டிருந்தாலும் கோட்சார அமைப்பில் கெடுதல்கள் விலகிக் கொண்டிருப்பதால் இது நல்லவைகள் நடக்கும் வாரம்தான். உங்களில் வெளிமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பண வி‌ஷயங்களில் நெருக்கடியான நிலைகள் உண்டு. அதேநேரம் தொழில் ஸ்தானம் வலுவாக இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது.
குடும்ப வீட்டில் சனி இருப்பதால் கணவன் மனைவிக்குள் சிறிது பின்னடைவுகள் இருந்தாலும் வார இறுதியில் நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேற்றுமைகளுக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. தொழில் வி‌ஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் தொழில் முன்னேற்றம் பெறுவதை காண்பீர்கள். இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும். குருபகவான் வலுப்பெற்று இருப்பதால் அனைத்திலும் மாறுதல்கள் இருக்கும்.
தனுசு

எட்டில் இருக்கும் ராகுவும், விரைய குருவும் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை லேசாக அசைத்துப் பார்க்கும் சம்பவங்களை நடத்தி வைப்பார்கள் என்றாலும், குரு, செவ்வாய் பரிவர்த்தனையால் குறைகள் எதுவும் சொல்ல முடியாத வாரம் இது. வாழ்க்கைத்துணை வி‌ஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். தனியார் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, பாக்கித்தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும்.
கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த வாரம் நல்லவாரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். உங்களில் சிலருக்கு வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். சகோதர உறவில் இந்த வாரம் விரிசல் உண்டு. எதையும் கவனமுடன் செய்ய வேண்டிய வாரம் இது.
 மகரம்

மகரத்திற்கு இந்த வாரம் வீண்செலவு களும், விரயங்களும் உள்ள வாரமாக இருக்கும். தேவையற்றவைகளில் பணஇழப்பு இருக்கும் என்பதால் ஒன்றுக்கு நான்கு முறை சிந்தித்து செலவு செய்வதும், கிரெடிட் கார்டை தொடாமல் இருப்பதும் நன்மைகளைத் தரும். இரும்பு, பெட்ரோல், பிளாஸ்டிக், வேஸ்ட்பேப்பர் போன்றவைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது நல்ல வாரம். சிலருக்கு திடீர் பணவரவு கிடைக்கும். வெகுநாட்களாக இழுபறியில் இருந்து வந்த ஒரு வி‌ஷயம் நல்லபடியாக முடிந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.
அரசு, தனியார்துறை ஊழியர்கள் மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. சட்டத்தை மீறி யாருக்கும் சலுகைகள் காட்டாதீர்கள். சாப்ட்வேர் போன்ற நுணுக்கமான துறைகளில் இருப்பவர்கள் நிதானமுடன் இருப்பது நல்லது. சிலருக்கு பெற்றோர் வி‌ஷயத்தில் மனக்கஷ்டங்கள் இருக்கலாம். எந்த ஒரு தாய் தகப்பனும் தான் பெற்ற குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்களே தவிர கஷ்டப்படவேண்டும் என்று நினைக்க மாட்டர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் பெற்றோர்களின் அருமை புரியும்.
கும்பம்

இந்த வாரம் பாக்கெட்டில்இருந்து பணம் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது நல்லது. 'வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்' என்ற பழமொழியை இப்போது கும்ப ராசிக்காரர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் விரோதங்கள் வரலாம். தேவையற்ற வி‌ஷயங்களுக்கு கடன் வாங்கவோ அல்லது அடுத்தவருக்கு ஜாமீன் போட்டு அதனால் வரும் தொல்லைகளையோ அனுபவிக்க வேண்டி இருக்கும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது.
 மீனம்

செவ்வாயும், குருபகவானும் பரிவர்த்தனை யோகமுடன் பலமாக இருப்பதால் இந்த வாரம் குருவின் மஞ்சள் நிறத்தையும், செவ்வாயின் சிகப்பு நிறத்தையும் தொழில்களாக கொண்டவர்களின் சுபிட்ச வாரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும் என்பதால் மீன ராசிக்காரர்களின் யோகவாரம் இது. அடுத்தவர்களால் மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு அடிபணிவார்கள். வருமானம் நன்றாக இருக்கும். அடுத்தவரிடம் போய் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
தர்மகர்மாதிபதிகள் பரிவர்த்தனையாகி நன்மை செய்யும் அமைப்பில் இருப்பதால் மீனத்தினர் இனி வெற்றிகளை குவிப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். இந்த வருட இறு திக்குள் இளைய பருவத்தினருக்கு திருமணம் நடப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் இப்போது நடக்கும். ஒரு சிலருக்கு நண்பர்களால் உதவிகளும், சிறப்புக்களும் உண்டு. மீனத்தினர் தொட்டது துலங்கும் வருடம் இது. இத்தனை நாள் உழைத்ததன் நல்ல பலனை இப்போது அனுபவிப்பீர்கள்.

Label