OUR CLIENTS
ஆம்பூரில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைப்பு
ஆம்பூரில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைப்பு Posted on 07-Jan-2019 ஆம்பூரில்  பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைப்பு

வாணியம்பாடி ஜன, 7-

ஆம்பூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர்கள் வீரமணி, நீலோபர் கபீல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் வழங்கும் விழா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள நியாய விலை கடை வளாகத்தில் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். நகர செயலாளர் மதியழகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் டில்லிபாபு, மாவட்ட விவசாயி அணி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாசியர் சுஜாதா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல் ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.  அப்போது மாவட்ட ஆட்சியர் இராமன்,   வேலூர் மாவட்டத்தில் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1126  ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசினை தமிழக அரசு வழங்கியும், 80 வயதிற்கு மேல் உள்ள முதியோருக்கு அஞ்சல் வழி மூலம் அவரவர் வீடுகளுக்கே சென்று அரசு வழங்க உள்ளது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் ராஜலட்சுமி, நகராட்சி பொறுப்பு ஆணையாளர் குமார், ஆவின் தலைவர் வேழலகன், மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், நகர துணை செயலாளர் கராத்தே மணி, இணை செயலாளர் அன்பரசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சீனிவாசன், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி கிளை செயலாளர் நபீல் (எ) சேட்டு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் மகாலஷ்மி நன்றி கூறினார்.

Label