OUR CLIENTS
பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் நியாய விலைகடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு
பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் நியாய விலைகடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு Posted on 07-Jan-2019 பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  இன்று முதல் நியாய விலைகடையில்  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு

வேலூர், ஜன.7-

இன்று முதல் நியாய விலைகடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம்-2019 பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும் மகிழச்சியுடன் கொண்டாடும் வகையில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்  முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு 1 கிலோ பச்சரிசி,  1 கிலோ சர்க்கரை,   2 அடி நீளகரும்புத்துண்டுடன் தலா 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு  பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000--/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) ரொக்கமாக நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கிட மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு 05.01.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.  
அதன்படி வேலூர் மாவட்டத்தில் காவலர் அட்டை, சர்க்கரைவிருப்ப அட்டை, எவ்விதபொருட்களும் பெறாஅட்டைகள் (ழிஷீஸீமீ சிணீக்ஷீபீ)  உட்பட அனைத்து குடும்£ அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அடங்கிய பைகள் 07.01.2019 முதல் பொங்கல் தினத்திற்கு முன்பு வரை அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளன. 
குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000--/- ஆகியவற்றை பெறமின்னணு குடும்புட்டை (ஷினீணீக்ஷீ௴ சிணீக்ஷீபீ) கொண்டு செல்ல வேண்டும். குடும்ப அட்டை தொலைத்துவிட்ட குடும்ப அட்டைதாரர்கள் அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையின் அடிப்படையிலும், அல்லது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் "ஒருமுறைகடவுச் சொல்" (ளிஜிறி) அடிப்படையில் வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கடைதிறப்பு நாட்களில் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரையிலும், பின்னர் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் வழங்கப்படும். நெரிசலை தவிர்க்கும் வகையில் நகர்ப்புற நியாயவிலைக் கடைகளில் பகுதிவாரியாக காலஅட்டவணை நிர்ணயிக்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஒரே நேரத்தில் வழங்கப்படும். எனவே, அனைத்து பொதுமக்களும் நெரிசல் ஏற்படாவகையில் மேற்கண்ட தினங்களுக்குள் நியாயவிலைக் கடைக்குச் சென்று பொங்கல் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கோ, அல்லது மாவட்டஆட்சித் தலைவர் அலுவலககட்டுப்பாட்டுஅறை எண்.1077-க்கு (இலவசஅழைப்பு) தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனார்.

Label