OUR CLIENTS
கீழ்பென்னாத்தூர் பகுதி அரசு பள்ளிகளுக்கு 1669 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
கீழ்பென்னாத்தூர் பகுதி அரசு பள்ளிகளுக்கு 1669 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் Posted on 07-Jan-2019 கீழ்பென்னாத்தூர் பகுதி அரசு பள்ளிகளுக்கு 1669 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

கீழ்பென்னாத்தூர், ஜன.7-

கீழ்பென்னாத்தூர் பகுதி அரசு பள்ளிகளில் பயிலும் 1669 மாணவர்களுக்கு ரூ.62.08 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேடநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி, இராசந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆகிய பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக நேற்று (6.1.2019) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 442 மாணவர்கள், கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 543 மாணவவிகள், மேக்களுர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 58 மாணவர்கள், 36 மாணவிகள் என மொத்தம் 94 மாணவ, மாணவிகள், ஐங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 83 மாணவர்கள், 108 மாணவிகள் என மொத்தம் 191 மாணவ, மாணவிகள், வேடநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 68 மாணவர்கள், 81 மாணவிகள் என மொத்தம் 149 மாணவ, மாணவிகள், இராசந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 135 மாணவர்கள், 115 மாணவிகள் என மொத்தம் 250 மாணவ, மாணவிகள், ஆக மொத்தம் 1669 மாணவ, மாணவிகளுக்கு ரூ.62.08 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி, திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் தூசி கே.மோகன் (செய்யார்), திரு.கு.பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அரங்கநாதன், முன்னாள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Label