OUR CLIENTS
திமுகவுக்குத் தேர்தலைக் கண்டு பயமில்லை: உதகையில் ஆ.ராசா பேச்சு
திமுகவுக்குத் தேர்தலைக் கண்டு பயமில்லை: உதகையில் ஆ.ராசா பேச்சு Posted on 08-Jan-2019 திமுகவுக்குத் தேர்தலைக் கண்டு பயமில்லை: உதகையில் ஆ.ராசா பேச்சு

திமுகவுக்குத் தேர்தலைக் கண்டு பயமில்லை என திமுக கொள்கைப் பரப்புச் செயலர் ஆ.ராசா பேசினார். 
உதகை நகர திமுக சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டம்  உதகை ஏ.டி.சி. சுதந்திர திடலில்  திங்கள்கிழமை நடைபெற்றது. உதகை நகரச் செயலர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பா.மு.முபாரக், தலைமை தேர்தல் பணிச் செயலர் க.ராமச்சந்திரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நீலகிரி மக்களவைத்  தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், திமுக கொள்கைப் பரப்புச் செயலருமான ஆ.ராசா மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மேலும் பேசியதாவது:  திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய சுகாதார அறிக்கையில் பன்றிக் காய்ச்சலில் தமிழகம் 4ஆவது இடத்தில் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல், நிர்வாக சீர்கேடுதான் உள்ளது. 
தான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன. வேலைவாய்ப்பு மட்டும் தரப்படவில்லை. ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒழித்தால் கருப்பு பணம் வெளியே வரும் என தெரிவித்தார்.
ஆனால் கருப்பு பணம் என கூறப்பட்ட அனைத்தும் வெள்ளையாக மாற்றப்பட்டுவிட்டன. ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல ஆயிரம் கோடி ரூபாய்  ஊழல் நடைபெற்றுள்ளது என்றார்.

Label