OUR CLIENTS
இசை கேட்டு வளரும் நாமக்கல் கோழிகள் பண்ணை முறை வளர்ப்பில் புதுவித ருசிகரம்!
இசை கேட்டு வளரும் நாமக்கல் கோழிகள் பண்ணை முறை வளர்ப்பில் புதுவித ருசிகரம்! Posted on 08-Jan-2019 இசை கேட்டு வளரும் நாமக்கல் கோழிகள் பண்ணை முறை வளர்ப்பில் புதுவித ருசிகரம்!

நாமக்கல், ஜன.8-

குழந்தைகளை வளர்ப்பதை போல, கோழிக்குஞ்சுகளை நாமக்கல் பண்ணையாளர்கள் வளர்க்கிறார்கள். சினிமா பாடல் இசை கேட்டு கோழிகள் வளர்வதை நாமக்கல் பண்ணைளில் காணமுடிகிறது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில், சுமார் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. அதிகபட்சம் ஒரு கோழியின் ஆயுட்காலம் 80 வாரங்களாக இருக்கிறது. இந்த காலகட்டங்களில் ஒவ்வொரு கோழியும் 320 முட்டைகள் வரை இடுகிறது. 80 வார வயதுடைய கோழிகள் பின்னர் கறிக்காக பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கோழிகளை அதன் குஞ்சு பருவத்தில் பண்ணையாளர்கள், குழந்தையை வளர்ப்பதை போல வளர்த்து வருவதை, நாமக்கல் பண்ணைகளில் காணமுடிகிறது. 
காலத்துக்கு ஏற்ற வகையில் பல்வேறு மாற்றங்களும் கோழிப்பண்ணை தொழிலில் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் தரையில் போட்டு வளர்க்கப்பட்ட கோழிகள், தற்போது 8 அடி உயர பில்லர்களில் ஷெட் போட்டு அதில் கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. கோழிகளை வளர்க்க ஒவ்வொரு பண்ணையிலும் 3 விதமான பில்லர் ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. குஞ்சுபருவம், வளர்பருவம், முட்டைக்கோழி பருவம் என 3 விதமாக கோழிவளர்ப்பு தொழில் நடைபெறுகிறது. ஒரு வயதுடைய கோழிகுஞ்சுகள் முதல் 8 வாரம் வளர்வது குஞ்சு பருவமாகும். இந்த பருவத்தில் தான் கோழிக்குஞ்சுகள் குழந்தைகள் போல வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு கூண்டிலும் 8 கோழிகள் வரை விடப்படுகிறது. 24 மணி நேரமும் தண்ணீரும், தீனியும் கூண்டுக்கு அருகாமையிலேயே கிடைக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
சினிமாபாடல்கள், நாட்டுப்புற பாடல்களை கேட்டு கோழிகுஞ்சுகள் வளரும் வகையில், 24 மணி நேரமும் கோழிபண்ணைகளில், ஸ்பீக்கர்கள், பென்டிரைவ், டேப்ரிக்கார்டர் மூலம் இசை மழை பொழிகிறது. கோழிக்குஞ்சுள் எப்படி  பாடலை உணர்கிறது. எதற்காக பண்ணைகளில் 24 மணி நேரமும் பாடல் ஒலிபரப்பப்படுகிறது என்பது குறித்து, புளியம்பட்டியை சேர்ந்த கோழிப்பண்ணையாளர் தர்மலிங்கம் கூறியதாவது: வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள், குஞ்சுகளை தன் இறக்கைக்குள் வைத்து பாதுகாக்கும். அதே போல பண்ணையில் வளர்க்கப்படும் கோழிக்குஞ்சுகள் பராமரிப்பில் அதிக வனம் எடுத்து கொள்கிறோம். குறைந்தபட்சம் ஓரு ஷெட்டில் 15 ஆயிரம் குஞ்சுகளை வளர்க்கிறோம். 
வெளிநபர்கள் யாராவது ஷெட்டுக்குள் நுழைந்தால், அந்த சப்தம் கேட்டு கோழி குஞ்சுகள் மிரளும், ஒன்றுடன் ஒன்று மோதி பிராண்டி காயப்படுத்தி கொள்ளும். குஞ்சுகளுக்கு தீனி போடுதல், பராமரித்தல், நிப்பிள்களில் தண்ணீர் வருகிறதா என்பதை பார்க்க தினமும் வேலையாட்கள் ஷெட்டுக்குள் செல்லவேண்டும்.  அப்படி செல்லும் போது கோழிகள் மிரளாமல் இருக்க, ரேடியோவை பண்ணைகளில் பாடவைப்போம். கோழிகள் தொடர்ந்து ரேடியோவாவில் பாட்டுகேட்டுகொண்டே இசையை உணரும் போது, வேலையாட்களின் சப்தத்தை பெரிதுபடுத்தாது. இது தற்போது காலத்துக்கு ஏற்ப மாறிவருகிறது. 
சில பண்ணைகளில் பென்டிரைவ் மூலம் 24 மணி நேரமும் பண்ணைகளில் பாட்டு பாடிகொண்டே இருக்கும். கோடை பண்பலை வானொலிகளில், அடிக்கடி பாடல் வருவதால் அந்த வசதியை பண்ணைகளில் ஏற்படுத்தியுள்ளோம். இசையை உணரும் கோழிகள் ஒருவித மகிழ்ச்சியான மனநிலைக்கு சென்று, தீனியையும் அதிகம் எடுத்து கொள்ளும். அதற்கேற்ப குஞ்சு பருவத்தில் அளிக்கப்படும் தீனியில் புரோட்டின் சத்து அதிகம் இருக்கும். 8 வாரத்துக்கு பின் வளர்பருவத்துக்காக வேறு ஷெட்டுக்கு குஞ்சுகளை மாற்றிவிடுவோம். அங்கு பாடல் ஒலிக்காது. குழந்தை வளர்ந்த பிறகு தைரியமாக வெளியே அனுப்பலாம் என்பது போல, வளர்ந்த கோழிகுஞ்சுகள் வேலையாட்களை பார்த்து பயப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Label