OUR CLIENTS
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை பாசக்கார நண்பர் உட்பட 3 பேர் அதிரடி கைது!
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை பாசக்கார நண்பர் உட்பட 3 பேர் அதிரடி கைது! Posted on 08-Jan-2019 காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை பாசக்கார நண்பர் உட்பட 3 பேர் அதிரடி கைது!

கும்பகோணம், ஜன.8-

கும்பகோணம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் அவரது நண்பர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கும்பகோணம் அருகே ஆடுதுறை ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முன்தஜிர்(19), பொறியியல் படித்து வந்தார். இவர் திருவிடை மருதூரில் உள்ள தனது நண்பன் பிறந்த நாள் விழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றிருந்தார். அதன்பின், அன்றிரவு முன்தஜிர் போனில் இருந்து, அவரது தாய் மும்தாஜ்பேகத்திடம் பேசிய நபர், முன்தஜிரை கடத்தி வைத்துள்ளதாக வும் ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் எனவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து திருவிடை மருதூர் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் திருபுவனம் ஆற்றங் கரையில் முன்தஜிர் கழுத்து அறுக்கப் பட்டு கொலை செய்யப் பட்டிருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமை யிலான தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.
அப்போது கடைசியாக முன்தஜிர் செல்போனுக்கு வந்த அழைப்பை வைத்து விசாரணையை தொடங்கினர். முன்தஜிரின் நண்பரான திருபுவனம் மருத்துவத் தெருவைச் சேர்ந்த முக மது ரபீக் மகன் இஜாஸ் அகமதுவை(20) பிடித்து விசாரித்தபோது தனது நண்பர்களான திருபுவனம் பள்ளிவாசல் தெரு முகமது ஜியாவுதீன் மகன் முகமது ஜலாலுதீன்(19), பூசாரித்தெரு ராஜ்முகமது மகன் முகமது சபீர்(19) ஆகியோருடன் சேர்ந்து முன்தஜிரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் போலீஸாரிடம் இஜாஸ் அகமது கூறியது: முன்தஜிரும், நானும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் தனியார் பள்ளியில் படித்தோம். பின்னர் நான் திருச்சியில் உள்ள ஐடிஐயில் சேர்ந்து படித்தேன். திருச்சி கல்லூரி ஒன்றில் படித்து வரும் மதுரை மாணவியும், நானும் இன்ஸ்டா கிராம் மூலம் அறிமுகம் ஆகி காதலித்து வந்தோம்.
முன்தஜிரும் இன்ஸ்டாகிராமில் அந்தப் பெண்ணுடன் பேசி வந்தார். அப்போது கல்லூரியில் படிக்கும் அந்த பெண் பொறியியல் படிக்கும் என்னைத் தான் விரும்புவார், ஐடிஐயில் படிக்கும் உன்னை விரும்பமாட்டார் என முன்தஜிர் என்னிடம் அடிக்கடி கூறி வந்தார். இதனால் அந்தப் பெண் எனக்கு கிடைக்காமல் போய்விடுவாரோ என நினைத்து முன்தஜிரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
இதற்காக எனது நண்பன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வருமாறு பொய் சொல்லி முன்தஜிரை அழைத்தேன். அவர் வந்ததும் அவரது கண்களில் ரிப்பனை கட்டி நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து குத்திக் கொன்றேன். பின்னர் அவரது தாயாருக்கு போன் செய்து பணம் கேட்டு கடத்தல் நாடகம் ஆடினோம் என்றார். பின்னர், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ஆட்டோ, ஸ்கூட்டி, செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Label