லஞ்சம் வாங்கிய விவகாரம் சுகாதார ஆய்வாளர் இடமாற்றம்! Posted on 08-Jan-2019
வேலூர், ஜன.8-
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பிறப்பு,இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க சுகாதார ஆய்வாளர் தயாளன்(50) லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. கடந்த 4ல் அங்கு சோதனை நடத்திய போலீசார் சுகாதார ஆய்வாளர் அறையில் இருந்து கணக்கில் வராத 18 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்தனர். பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க அரசு நிர்ணயித்த 200 ரூபாய்க்கு பதில் 1,000 ரூபாய் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து கத்தாழம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தயாளன் இடமாற்றம் செய்யப்பட்டார்.