OUR CLIENTS
கமிஷனுக்காக சாலை பெயர்ப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி!
கமிஷனுக்காக சாலை பெயர்ப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி! Posted on 08-Jan-2019 கமிஷனுக்காக சாலை பெயர்ப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மதுரை, ஜன.8-

சாலை அமைப்பதாக கூறி 4 மாதங்களுக்கு முன்பு பரப்பப்பட்ட ஜல்லி கற்களால் தினமும் வாகன ஓட்டிகள் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

மேலூர் அருகே கீழவளவு ஊராட்சியில் ஏரியூர் சாலை விலக்கில் உள்ளது குழிச்செவல்பட்டி. இக்கிராமத்தில் நன்றாக இருந்த சாலையை பெயர்த்து புதிய சாலை அமைக்க கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை  எடுக்கப்பட்டது. சாலை பெயர்க்கப்பட்டு பின் ஜல்லி கற்களை அவற்றின் மீது பரப்பப்பட்டது. இதன்பிறகு தார் ஊற்றி இயந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யப்பட வேண்டும். ஆனால் அந்த பணியை மட்டும் ஏனோ கான்ட்ராக்டர்கள் செய்யவில்லை. இதனால் குழிச்செவல்பட்டி சுடுகாடு முதல் சருவலையபட்டி வரை உள்ள 2 கிலோ மீட்டர் தூர சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் இதில் செல்லும் வாகனங்கள் பஞ்சர் ஆகி விடுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். 

Label