OUR CLIENTS
வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு புத்துயிர் பழமையான கட்டடத்தை புனரமைத்த மக்கள்!
வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு புத்துயிர் பழமையான கட்டடத்தை புனரமைத்த மக்கள்! Posted on 08-Jan-2019 வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு புத்துயிர் பழமையான கட்டடத்தை புனரமைத்த மக்கள்!

சென்னை, ஜன.8-

புராதன கட்டடத்தில் இயங்கி வந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தை 25 லட்ச ரூபாய் செலவில் பொதுமக்கள் புனரமைத்து கொடுத்துள்ளனர்.

சென்னை, வண்ணாரப் பேட்டை காவல் நிலையம் 121 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1898& டிச., 31ம் தேதி அப்போதைய மெட்ராஸ் போலீஸ் கமிஷனர் அகர் பட்லி அகர் இக்கட்டடத்தை திறந்து வைத்தார். அப்போது வண்ணாரப் பேட்டை பகுதிகளில் சென்னை துறைமுகம், ஸ்டான்லி மருத்துவமனை,  கரீம், தாஜ்மகால், பவிதா போன்ற பீடி கம்பெனிகள் இருந்தன. இப்பகுதியில் குற்றச்செயல்கள் நடப்பதை தடுக்க இந்த காவல் நிலையம் தொடங்கப்பட்டது. பல வரலாற்று வழக்குகளை உள்ளடக்கிய இக்காவல் நிலையம் சிதிலமடைந்து புதர்கள் மண்டி மோசமாக காட்சியளித்தது. இக்காவல் நிலையத்தை பார்வையிட்ட தற்போதைய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கட்டடத்தை உடனடியாக புனரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தனியார் நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் 25 லட்ச ரூபாய் செலவில் ஆறு மாத காலத்தில் இந்த காவல் நிலையம் சீரமைக்கப்பட்டது.
வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடை நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு வேண்டிய மேஜை, நாற்காலிகளை வழங்கினர். தனியார் பெயின்ட் கம்பெனி நிறுவனத்தினர் கட்டடத்தின் முழு சுண்ணாம்பு பூச்சு வேலையை செய்து கொடுத்தனர். மேலும் தனியார் நிறுவனம் சார்பில் காவல் நிலையத்திற்கு இரு கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் காவல் நிலையத்தை சுற்றி புல்வெளிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் மணிக்கூடு கட்டடம் உள்ளிட்ட படங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பீட்டர் ஜவகர் கூறியதாவது: சமீபத்தில் இந்தியா முழுவதும் புராதன கட்டடத்தில் செயல்படும் சிறந்த காவல் நிலையத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டன. 
அதில் தமிழகத்தில் இருந்து பெரியகுளம், கன்னியா குமரி மற்றும் சென்னையில் இருந்து வண்ணாரப் பேட்டை, வடபழனி காவல் நிலையங்கள் போட்டியின. இதற்காக தன்னார்வலர் களின் உதவியுடன் வண்ணாரப் பேட்டை காவல் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பயன்பெறும் வகையில் காவல் நிலையம் உள்ளே உடற்பயிற்சி கூடம்அமைக்கும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Label