OUR CLIENTS
மெக்சிகோ எல்லையில் சுவர் வேண்டாம் இரும்பு தடுப்பு வேலி போதும் - டிரம்ப்
மெக்சிகோ எல்லையில் சுவர் வேண்டாம் இரும்பு தடுப்பு வேலி போதும் - டிரம்ப் Posted on 08-Jan-2019 மெக்சிகோ எல்லையில் சுவர் வேண்டாம் இரும்பு தடுப்பு வேலி போதும் - டிரம்ப்

வாஷிங்டன், ஜன.8-

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க கான்கிரீட் சுவருக்கு பதிலாக இரும்பினாலான வேலி எழுப்பினால் போதும் என்று  அமெரிக்க  அதிபர் டொனால்டு டிரம்ப் சற்று இறங்கி வந்துள்ளார்.

மெக்சிகோவில் இருந்து அந்நாட்டு மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைவதைத் தடுக்க, அந்நாட்டு எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இந்த திட்டத்திற்கு தேவையான 5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்கீடு செய்ய டிரம்ப் கோரி வருகிறார். ஆனால் ஜனநாயக கட்சியினர் 1.30 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க மட்டுமே ஒப்புதல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கு மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் மெக்சிக்கோ எல்லையில், கான்கிரீட்டால் சுவர் எழுப்ப முடியாவிட்டால், இரும்பினலான வேலி எழுப்பப்படும் என தெரிவித்தார்.
இரும்பினாலான சுவர் வலுவானதாகவும் ஊடுருவ இயலாததாகவும் இருக்கும். சிறுபான்மையினர் தலைவர் சக் ஸ்கூமெர் மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரின் பிரதிநிதிகளை துணை அதிபர் மைக் பென்ஸ் சந்தித்தார். இந்த ஆக்கப்பூர்வமான சந்திப்பில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை சுவர் எழுப்புவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்சிக்கோ இடையே எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக, தேவைப்பட்டால், நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்யப் போவதாகவும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ளதால், கடந்த 2 வாரங்களாக அமெரிக்க அரசு அலுவலகங்கள் செலவுக்கு பணமின்றி முடங்கி கிடக்கின்றன. கடந்த 22-ம் தேதி தொடங்கிய பகுதிநேர அரசு துறை மூடல் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Label