OUR CLIENTS
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இன்று வருகை
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இன்று வருகை Posted on 09-Jan-2019 இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இன்று வருகை

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பாம்பன், தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர்  இன்று விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்.   
ராமேசுவரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் என 16 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். படகுகளை பறிமுதல் செய்த கடற்படையினர் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சி.ஐ.டி.யூ மீன்பிடி தொழில் சங்கத்தினர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.   அதைத்தொடர்ந்து, இலங்கை நீதிமன்றம் கடந்த வாரம் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்தது. அவர்கள் அனைவரையும் இன்று விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label