OUR CLIENTS
தருமபுரி பா.ஜ.க.வினருடன் பிரதமர் நாளை காணொலியில் பேசுகிறார்
தருமபுரி பா.ஜ.க.வினருடன் பிரதமர் நாளை காணொலியில் பேசுகிறார் Posted on 09-Jan-2019 தருமபுரி பா.ஜ.க.வினருடன் பிரதமர் நாளை  காணொலியில் பேசுகிறார்

தருமபுரி:- 

பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை (ஜன.10)  காணொலி மூலம் பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் பேசுகிறார்.

இது குறித்து, பா.ஜ.க. தருமபுரி மாவட்டத் தலைவர் ஆர்.ஏ.வரதராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தருமபுரி மக்களவை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் காணொலி மூலம் உரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சி, தருமபுரி - பென்னாகரம் சாலையில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் ஜன.10  காலை10 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்றார்.

Label