OUR CLIENTS
திறப்பு விழா சலுகை எதிரொலி மலபார் கோல்ட் நகை கடையில் மலைபோல் குவியும் மக்கள்
திறப்பு விழா சலுகை எதிரொலி மலபார் கோல்ட் நகை கடையில் மலைபோல் குவியும் மக்கள் Posted on 09-Jan-2019 திறப்பு விழா சலுகை எதிரொலி மலபார் கோல்ட் நகை கடையில் மலைபோல் குவியும் மக்கள்

வேலூர், ஜன.9-

வேலூரில் மலபார் கோல்ட் நகை ஷோரூம் திறப்பு விழா சலுகையால் மக்கள் மலைபோல் குவிகின்றனர். 

வேலூர் ஆபீஸ் லைன் பகுதியில் மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் ஷோரூம் புதிய கிளை அண்மையில் (ஜனவரி 5ம் தேதி) திறக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 11 ஷோரூம்கள் இருந்த நிலையில், வேலூரில் பன்னிரண்டாவது கிளை திறக்கப்பட்டது. விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார்.  
திறப்பு விழா சலுகையாக வைரத்தின் மீது 10% தள்ளுபடி, தங்கத்திற்கு கிராமிற்கு ரூ.100 தள்ளுபடி உண்டு என்று சேர்மன் எம்.பி. அகமது தெரிவித்தார். இதனால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளதில் மலைபோல் குவிகின்றனர். உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்துவரும் முன்னணி நிறுவனமும், இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கிக் கொண்டே உள்ளதுமான மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு மற்றும் வைரம் தமிழ்நாட்டில் வேலூரில் உலகத்தரமிக்க ஷோரூமை திறந்துள்ளது. அதிக இட வசதியுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. 
இந்நிறுவனம் தற்போது 10 நாடுகளில் 250 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், ராமநாதபுரம், தர்மபுரி, வேலூர் ஆகிய நகரங்களில் 12 கிளைகளை கொண்டுள்ளது.
இதுகுறித்து மலபார் குழுமத்தின் தலைவர் திரு எம்.பி.அகமது கூறியதாவது:-
தமிழ்நாடு நூற்றாண்டுகளுக்கு முன்பே நகைகள் தொடர்பான மிகவும் வளமான பாரம்பரியத்தை கொண்ட மாநிலமாகும். குறிப்பிட்ட பகுதியில் வர்த்தகத்தை தொடங்கும் முன்பு மலபார்கோல்டு-டைமண்ட்ஸ் நிறுவனம் அந்த பகுதிகென்றே உள்ள பிரத்யேக நகை வடிவமைப்பு பாரம்பரியம் குறித்த ஆழமான ஆய்வு செய்யும். திருமணம் குறித்த சடங்குகள் விழாக்கள் எத்தகைய நகைகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பன உள்ளிட்ட அனைத்தையும் அறிந்த பின்னர் நாங்கள் அறிமுகபடுத்தும் நகைகள் புதுமையான வடிவங்களை கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அந்தந்த பகுதிகென்று உள்ள பாரம்பரியத்தையும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட விழாக்களில் எத்தகைய நகைகள் அணிய விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்பவும் நகைகள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அந்தந்த பகுதிகென்று உள்ள நகை விருப்பங்கள் சமூகத்தில் அளிக்கப்படும் முன்னுரிமைஆகியவற்றை கொண்டு போதுமான நகைகள் இருப்பு வைத்திருப்போம். நாங்கள் ஏன் ஒவ்வொரு பகுதியிலும் எங்களது கிளைகளை விரிவாக்கி கொண்டே இருக்கிறோம் என்றால் ஒவ்வொரு பகுதியும் சிறப்பு வாய்ந்த கலாச்சாரம் மதம் சமூக பழக்கங்களை கொண்டுருப்பது.  இவ்வாறு மலபார் குழுமத்தின் தலைவர் திரு எம்.பி.அகமது கூறினார்.
இந்த ஷோரூமில் மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின், அணிந்தாலே ஜொலிக்கும்  வைர நகைகளான 'மைன்', பிரம்மாண்டமான  வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட 'எரா' வகை வைர நகைகள்; நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை  வடிமைப்புகளில் உருவான டிவைன், கை வினை கலைஞர்களால்  கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான 'எத்தினிக்'; மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான 'பிரீசியா'; பாரம்பரிய நகைகளின் தொகுப்பான 'டிவைன்';  குழந்தைகளுக்கான நகை தொகுப்பான 'ஸ்டார்லெட்' போன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய நகையில் உள்ளன. 
தலைசிறந்த நவை வடிமைப் பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப் பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்தகலைஞர்களின் நிபுணத்துவத்தையும்  தனிப்பட்ட திறன்களையும், கலைநயத்தையும்  நிருபிக்கும் வகையிலும் உள்ளன.  மலபார் கோல்டு அன்ட் டைமன்ட்ஸ் நிறுவனம் வடிவமைத்த பிரத்யோக  நகைகள் எக்காலத்திலும் அணிவதற்கு சிறப்பு சேர்க்கக்கூடிய  சிறப்பம்சமாக விளங்குகின்றன. 
இதுவரை நீங்கள் பார்த்திராத முற்றிலும் புதுமையான வடிவங்களில் உருவாக்கப்பட்ட நகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்பது முக்கிய நோக்கம் என்று மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் செயல்படுகின்றது.  மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும்  ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால்மார்க் சான்று பெற்ற வெள்ளி நகைகளையும் மட்டுமே விற்பனை செய்கிறது. அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, செய்கூலி, கற்களுக்கான கூலி, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன்  வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும்  விலையையும்  எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, ஒராண்டு இலவச காப்பீடு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் என மதிப்புமிக்க சேவையை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.  மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 250 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்றால் மிகையாகது.
இந்த ஷோரூமில் ஏராளமான தங்கம், வைரம், பிளாட்டினம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் குறைந்த விலையில் தரமான முறையில் நகைகள் கிடைப்பதால், இப்பொழுது வேலூர் பொதுமக்கள் அழகுக்கு அழகு சேர்க்கவும், திருமணத்திற்கு தேவையான அனைத்து நகைகளையும் சிறப்பு சலுகை விலையில் வாங்க மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்  ஷோரூம்க்கு சென்றவண்ணம் உள்ளனர்.
சில நகைகடைகள், "நம்பிக்கைதான் எல்லாம் என்று தங்கத்தில் இருப்பு கம்பிகளையும், அதிக செம்புகளையும் கலந்து ஏமாற்றுகின்றன. இதனால் தரமான நகைகளை வாங்க வேலூரில் இருந்து சென்னைக்கு கைராசியான மலாபார் கோல்டு கடைக்கு வாடிக்கையளார்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வேலூரில் மலபார் கோல்டு கிளை திறந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்". 

Label