OUR CLIENTS
திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அமைச்சர் கடம்பூர் ராஜூ
திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அமைச்சர் கடம்பூர் ராஜூ Posted on 10-Jan-2019 திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்ந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
விருதுநகரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுப்பிரிவில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கவில்லை. அந்த நிலைப்பாட்டில் தான் தமிழக அரசும் உள்ளது. மத்திய அரசுக்கு எந்த நிலையிலும் அடிபணிய மாட்டோம், எனவே, தான் நாடாளுமன்றத்தில் வெளி நடப்பு செய்தோம்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கொள்கை முடிவு எடுக்க முடிவில்லை. முடிவு தெரிந்த பிறகு தான் அடுத்த நிலையை எடுக்க முடியும். 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேல்முறையீட்டு மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு வழங்கினாலும் அரசு எதிர்கொள்ளும். 
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை சம்பிரதாயத்துக்காக அரசு அமைக்க வில்லை. இந்த விசாரணையின் முழு அறிக்கை வர உள்ளது. அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களுக்கு சிறப்புக் காட்சி கிடையாது. திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ. 50 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இதே நிலை தொடர்ந்து மூன்றாவது முறையாக இருந்தால் சம்பந்தப்பட்ட தியேட்டரின் உரிமம் ரத்து செய்யப்ப டும் என்றார்.

Label