OUR CLIENTS
"கேரள அரசு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்': ராம. கோபாலன்
"கேரள அரசு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்': ராம. கோபாலன் Posted on 10-Jan-2019

கன்னியாகுமரி:-

கேரளத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையைக் கருத்தில் கொண்டு, அந்த அரசு மீது  மத்திய அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இந்து முன்னணி நிறுவனர்- தலைவர் ராம. கோபாலன்.

இதுகுறித்து,  மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது: கேரள  அரசு பல்வேறு விவகாரங்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியுள்ளது. சபரிமலை தொடர்பான தீர்ப்பில் மட்டும் பிடிவாதமாக இருக்கிறது. இதனால் அந்த மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதைக் காரணமாகக் கொண்டு கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை  மத்திய அரசு கவிழ்த்தால்,  அந்தக் கட்சிக்குத்தான் பலம் அதிகரிக்கும். எனவே, கேரள அரசு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.
ஐயப்ப பக்தர்களும் மாநில அரசுக்கு எதிராக விழிப்புணர்வுப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார் அவர்.

Label