OUR CLIENTS
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம்! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம்! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு Posted on 11-Jan-2019 சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம்! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி, ஜன.11-

சிபிஐ இயக்குநர் பதவில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு இணையாக சிறப்பு இயக்குநர் என்ற பதவியில் ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களை அடுத்து, அலோக் வர்மாவை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் சிபிஐ இயக்குநராக பணியாற்ற இரு நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிஐ இயக்குநர் பதவிக்கு திரும்பிய அலோக் வர்மா, தனது ஆதரவு அதிகாரிகளை இடமாற்றி இயக்குநர் பொறுப்பு வகித்த நாகேஷ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார். மேலும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் அதிகாரி களையும் அவர் இடமாற்றம் செய்தார்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பங்கேற்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி அடங்கிய  மூவர் குழுவின் ஆலோசனை நடைபெற்றது. அலோக் வர்மா நீக்கத்திற்கு மல்லிகார்ஜூன கார்கே, எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரியும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனை அடுத்து பெரும்பான்மை முடிவு என்கிற வகையில், சிபிஐயின் இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை மாற்றுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.  வருகிற 31-ஆம் தேதி அன்று பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label