அமெரிக்காவில் பல்கலைக்கழக டீன் பதவியில் இந்திய வம்சாவளி நியமனம் Posted on 14-Jul-2016
அமெரிக்கா:
அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் கல்லூரியின் டீன் பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் கின்சுக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீரியங் துறையில் பட்டமும், ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்டிராத்கிளைடு பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் கம்ப்யூட்டர் எய்டட் அறிவியலில் முதுநிலை பட்டமும், இங்கிலாந்தின் டி மான்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றவர் ஆவார்.
டாக்டர் கின்சுக், அடுத்த மாதம் 15-ந் தேதி டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் கல்லூரி டீன் பொறுப்பை ஏற்பார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றில் சேருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். தகவல் கல்லூரி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை நான் அறிவேன். அவற்றை நான் சந்தித்து, இன்னும் பல மடங்கு அந்த கல்லூரியை உயர்த்துவேன்” என குறிப்பிட்டார்.