ரஜினிகாந்த் - அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? பிரதமர் நரேந்திர மோடி பதில் Posted on 11-Jan-2019
சென்னை, ஜன.11-
தமிழ்நாடு - அரக்கோணம் பாஜக பிரமுகர்களுடான கலந்துரையாடலில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தமிழ்நாடு - அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கூடலூர், தர்மபுரி பாஜக பிரமுகர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அ.தி.முக மற்றும் ரஜினிகாந்துடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.
மக்களுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். இதுவே வெற்றிக் கூட்டணி. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்தை நடத்த கதவுகள் திறந்தே இருக்கின்றன. தமிழகத்தில் இருதரப்பு நம்பிக்கையின் அடிப்படையில் பாஜக கூட்டணி அமைக்கும்.
கூட்டணி விவகாரத்தில் பாரதீய ஜனதா வாஜ்பாய் காட்டிய வழியில் செயல்படும். கூட்டணி அரசியலை 20 ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக நடத்தியவர் வாஜ்பாய். பழைய நண்பர்களையும் பாரதீய ஜனதா வரவேற்க தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி காணொலிகாட்சி பேச்சில் கூறினார்.