OUR CLIENTS
சிறு தொழில்களுக்கு விதிவிலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு! டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு
சிறு தொழில்களுக்கு விதிவிலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு! டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு Posted on 11-Jan-2019 சிறு தொழில்களுக்கு விதிவிலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு! டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு

புதுடெல்லி, ஜன.11-

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் விதிவிலக்குப் பெறுவதற்கான மொத்த விற்று வரவு வரம்பை ரூ. 40 லட்சமாக நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் உயர்த்தியது.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. மாநில நிதியமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர் என்ற வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முன்னரே அறிவித்தப்படி நேற்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு விதிவிலக்கு தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஏற்கெனவே குறிப்பிட்டபடி, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான விதிவிலக்குத் தொகையை ரூ.40 லட்சமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் இந்த விதிவிலக்கு வரம்பு ரூ. 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே இந்தியா முழுக்க உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான விதிவிலக்கு வரம்பு ரூ.20 லட்சமாக அமைந்தது. இந்த வரம்பு இப்பொழுது 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கம்போசிசன் திட்டத்தின்கீழ் குறைந்த அளவு வரி செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான விற்றுவரவு அளவு ரூ. 1 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சேவை துறையினருக்கு காம்போசிசன் திட்டத்தை நீடிப்பதது என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. சேவை துறை தொழில் நிறுவனங்கள் ரூ.50 லட்சம் வரை இந்த காம்போசிசன் திட்டத்தின்கீழ் வரிசெலுத்தலாம். ஆனால், சேவை நிறுவனங்களுக்கான வரி விகிதம் 6 சதவீதமாக அமையும்.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட நிவாரணத்தை வழங்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். கேரள மாநிலத்தில் பெரும் தேசியப் பேரிடர் காரணமாக கடுமையான நிதிச்சிக்கலில் கேரள அரசு சிக்கியுள்ளது.
நிவாரணப் பணிகளுக்கு செலவிட பெருமளவு பணம் தேவைப்படுகிறது. எனவே அனைத்து வரிகளும் ஜிஎஸ்டி வரியில் சேர்க்கப்பட்ட காரணத்தால் கூடுதலாக செஸ் வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு கோரி வந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று மாநிலங்களுக் கிடையிலான விற்பனைகளின் மீது 1 சதவீத பேரழிவு செஸ் வரிவிதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இந்த வரியினை 2 ஆண்டுகள் வரை கேரள அரசு விதிக்கலாம் எனறும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்கள் மீதும் லாட்டரி விற்பனை மீதும் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த இரு பிரிவுகள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கலாம் வரி அளவு என்ன? என்பன போன்ற விஷயங்களை முடிவு செய்ய 7 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை அமைப்பது என்றும் அந்தக் குழுவின் பரிந்துரையைப் பெற்று அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யலாம் என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டது.

Label