OUR CLIENTS
அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டம் தொடங்கிவைப்பு!
அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டம் தொடங்கிவைப்பு! Posted on 11-Jan-2019 அசில் இன நாட்டுக் கோழிகள்  வழங்கும் திட்டம் தொடங்கிவைப்பு!

சென்னை, ஜன.11-

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று (10.1.2019) சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகரில், 73 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகங்களை உள்ளடக்கிய நகர் நிர்வாக அலுவலக வளாகக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 124 நகராட்சிகளில் செயல் படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று, 528 நகர்ப்புற அமைப்பான பேரூராட்சிகளில் செயல் படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக பேரூராட்சிகள் இயக்ககம் செயல்பட்டு வருகிறது. 
மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 194 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை வரைவு அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஏழ்மை நிலையில்  உள்ள  77,000 கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு,  தலா ஒரு பயனாளிக்கு  50 எண்ணிக்கையிலான விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக் கோழிகள் மற்றும்  அவற்றின் பாதுகாப்பிற்காக  கூண்டு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 பெண் பயனாளிகளுக்கு   நாட்டுக் கோழிகள் மற்றும்  கூண்டுகளை வழங்கி  துவக்கி  வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  அமைச்சர் சி.வி. சண்முகம், காவல்துறை டிஜிபி, டி.கே. ரங்கராஜன், ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. சண்முகம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Label