OUR CLIENTS
சென்னையில் கடும் பனி, புகை மூட்டம்: பைக்கில் சென்ற மென்பொருள் நிறுவன அதிகாரி மின்கம்பத்தில் மோதி பலி
சென்னையில் கடும் பனி, புகை மூட்டம்: பைக்கில் சென்ற மென்பொருள் நிறுவன அதிகாரி மின்கம்பத்தில் மோதி பலி Posted on 14-Jan-2019 சென்னையில் கடும் பனி, புகை மூட்டம்: பைக்கில் சென்ற மென்பொருள் நிறுவன அதிகாரி மின்கம்பத்தில் மோதி பலி

சென்னை, ஜன.14-

சென்னையில் கடுமையான பனிமூட்டம் மற்றும் போகி புகை மூட்டம் காரணமாக சாலை தெரியாததால் பைக்கில் சென்ற தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். 

நாடு முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவுவதால் விமான போக்குவரத்தும், சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போகி பண்டிகை காரணமாக மக்கள் வேண்டாத பழைய பொருட்களை எரித்து வருவதால் சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது. 
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த அஸ்வின் குமார். வழக்கம் போல இரவுப்பணி முடிந்து அதிகாலை பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சாலை தெரியாததால் எதிரே இருந்த மின்கம்பத்தில் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். 
அஸ்வின்குமாரின் தந்தை திண்டுக்கல் நகராட்சியின் ஆணையராக இருந்து வருகிறார். பொங்கல் பண்டிகை தினத்தில் அஸ்வின் குமார் விபத்தில் பலியான செய்தி அறிந்து அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Label