OUR CLIENTS
கொடநாடு விடியோ விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!
கொடநாடு விடியோ விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்! Posted on 14-Jan-2019 கொடநாடு விடியோ விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

சென்னை, ஜன.14-

கொடநாடு விடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கொடநாடு விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்திய தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், அதனை சிடி வடிவில் தில்லியில் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். 5 பேர் மரணம் விபத்தல்ல, அது கொலைதான் என்பன உள்ளிட்ட பல விஷயங்களை பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சயன் என்பவரும், வலையார் மனோஜ் என்பவரும் இப்போது பேட்டியளித்திருக்கின்றனர்.
 இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சனிக்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் பதில் சொல்லமுடியவில்லை.
 எனவே, இதுதொடர்பாக சிறப்பு விசாரணை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்து விசாரிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும். முதல்வரை அழைத்து குடியரசுத் தலைவரும், ஆளுநரும் விளக்கம் கேட்க வேண்டும்.
 இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் ஆகியோரின் கவனத்துக்கு திமுக கொண்டு செல்வோம் என நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை மாலை(ஜன.14) 5.30 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து இதுத்தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி முறையிடுகிறார் எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். 
தமிழக அரசியலில் கொடநாடு கொள்ளை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Label