OUR CLIENTS
சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி Posted on 14-Jan-2019 சாதிக் பாட்ஷா மரணத்தில்  சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

விழுப்புரம், ஜன.14-

சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா? என தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அடிபடும் நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியில் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பொய்யான குற்றத்தாட்டுகளுக்கு அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின், சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Label