OUR CLIENTS
பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடுகள்! விசாரணை நடத்த தினகரன் வலியுறுத்தல்
பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடுகள்! விசாரணை நடத்த தினகரன் வலியுறுத்தல் Posted on 14-Jan-2019 பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடுகள்! விசாரணை நடத்த தினகரன் வலியுறுத்தல்

சென்னை, ஜன.14-

ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பொது மக்களுக்கு வழங்கவேண்டிய அரிசி மற்றும் சர்க்கரையில் மிகப்பெரும்பாலான இடங்களில் 50 கிராம் முதல் 80 கிராம் வரை குறைவாகவே வழங்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. 
இது உண்மையானால், சுமார் 250 மெட்ரிக் டன் அரிசி மற்றும் சர்க்கரையை சில தனிநபர்கள் கைப்பற்றி வெளி மார்க்கெட்டில் விற்றிருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல, முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டின் அடக்கவிலை இன்றைய மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையில் 24 ரூபாய்க்குள்தான் இருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை மீறி, 30 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு பாக்கெட்டிற்கு கூடுதலாகத் தரப்படும் தலா 6 ரூபாய் யாருக்குப் போகிறது? இது உண்மையானால் சுமார் 11.7 கோடி ரூபாயை யார் சுரண்டியது?
இரண்டு அடி நீளக் கரும்பு சந்தையில் அதிகபட்சம் 5 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், 15 ரூபாய் என்று கணக்கு காட்டி, சுமார் 20 கோடி ரூபாய் அதிகமாக செலவிடப் பட்டிருக்கிறது. இது யாருக்குப் போனது? என்றெல்லாம் பல கேள்விகளை இதன் பின்னணியை அறிந்தவர்களும் பத்திரிகைகளும் எழுப்பி வருகின்றனர். முழுக்க முழுக்க அடித்தட்டு ஏழை மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய அதுவும் பண்டிகை காலத்திட்டத்திலேயே இத்தனை முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
இப்படி நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடந்த தவறுகளைத் திருத்தி, மீதமுள்ளவர் களுக்காவது நியாயமான முறையில் இலவசப் பொருட்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Label