OUR CLIENTS
உலகளவில் அங்கீகாரம்: பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்த ‘ரெளடி பேபி’ பாடலின் விடியோ!
உலகளவில் அங்கீகாரம்: பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்த ‘ரெளடி பேபி’ பாடலின் விடியோ! Posted on 17-Jan-2019 உலகளவில் அங்கீகாரம்: பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்த ‘ரெளடி பேபி’ பாடலின் விடியோ!

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இப்பாடலைக் கண்ட ரசிகர்கள் நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகளை அளித்துள்ளார்கள். 
யூடியுபில் வெளியான நாள் முதல் ரசிகர்கள் இப்பாடலைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் இப்பாடலுக்கு யூடியூபில் இதுவரை 8 கோடியே 51 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.
இதுதவிர இப்பாடலின் விடியோவுக்கு இன்னொரு பெருமையும் கிடைத்துள்ளது. பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்துள்ளது.

Label