OUR CLIENTS
அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பா.ஜனதா தகவல் தெரிவித்துள்ளது.
அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பா.ஜனதா தகவல் தெரிவித்துள்ளது. Posted on 17-Jan-2019 அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பா.ஜனதா தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, ஜன. 17-

பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலெரியா தலைமையிலான மருத்துவ குழு அமித்ஷாவின் உடல் நிலையை கண்காணித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபேய் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அமித் ஷாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பா.ஜனதா தகவல் தெரிவித்துள்ளது.
பா.ஜனதா செய்திப்பிரிவு தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அணில் பாலுனி பேசுகையில், “பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா நலமாக உள்ளார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். உடல்நலம் பெற வாழ்த்து கூரிய அனைவருக்கும் நன்றி...” என கூறியுள்ளார்.

Label