OUR CLIENTS
தமிழகத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள 8 புதிய ரயில் திட்டங்கள் புத்துயிர் பெறுமா?
தமிழகத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள 8 புதிய ரயில் திட்டங்கள் புத்துயிர் பெறுமா? Posted on 18-Jan-2019 தமிழகத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள 8 புதிய ரயில் திட்டங்கள் புத்துயிர் பெறுமா?

சென்னை, ஜன.18-

தமிழகத்தில் சென்னை - கன்னி யாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின்படி தற்போது மதுரை வரையில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மதுரை - கன்னி யாகுமரி வரையில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளாக இரட்டை மற்றும் அகலப்பாதைகளுக்கும் மின்வழித்தடம் அமைக்கும் திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், புதிய ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் அவை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், இத்திட்டத்துக்கான மதிப்பீடு அதிகரிப்பதோடு, சில திட்டங்களைக் கைவிட வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை - மகாபலிபுரம் - கடலூர் (179 கி.மீ), திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை (70 கி.மீ), திண்டிவனம் - நகரி (179 கி.மீ), அத்திப்பட்டு - புத்தூர் (88 கி.மீ), ஈரோடு - பழநி (91 கி.மீ), மதுரை - தூத்துக்குடி (143 கி.மீ), ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக் கோட்டை - கூடுவாஞ்சேரி (60 கி.மீ), மொரப்பூர் - தருமபுரி (36 கி.மீ) ஆகிய 8 ரயில்பாதை திட்டங்கள் 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் அறிவிக்கப்பட்டன.
மேற்கண்ட 8 புதிய ரயில்பாதை திட்டங்கள் சுமார் 849 கி.மீ தூரம் கொண்டது. இந்த திட்டங்களின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.11,405 கோடியாகும். ஆனால், இந்த திட்டங்களுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யாததால், கடந்த 10 ஆண்டுகளாக பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. நிதி ஒதுக் கீட்டில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதேபோல், மேற் கண்ட பெரும்பாலான திட்டங் களுக்கு மாநில அரசு இன்னும் போதிய அளவில் நிலங்களை கையகப்படுத்தி தரவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, ''தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான புதிய திட்டங்கள், கிடப்பில் உள்ள ரயில் திட்டங்கள் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகத் துக்கு ஏற்கெனவே அறிக்கையை அனுப்பியுள்ளோம். புதிய ரயில் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட நிலம் கையகப்படுத்து வதில் பிரச்சனை நீடிக்கிறது. கூட்டு ஒப்பந்தம் மூலம் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நிறை வேற்றிட மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில், விரைவில் நல்ல முடிவு ஏற்படும். மேலும், வரும் மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேயில் உள்ள திட்டங்களை விரைவாக செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.

Label